உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார் கார்ல்ஸன்!

Updated: 29 November 2018 13:48 IST

தொடர்ந்து மூன்று டைபிரேக்கர்களை வென்றார் கார்ல்ஸன். ஆட்டத்தில் பயமற்ற போக்கை அவர் கையாண்டார்

Magnus Carlsen Retains World Chess Championship Title, Beats Fabiano Caruana
அமெரிக்காவின் பாபியானோ கரோனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்ஸன் © AFP

மூன்று முறை உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்ஸன் தனது உலகச் சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துள்ளார். அமெரிக்காவின் பாபியானோ கரோனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து மூன்று டைபிரேக்கர்களை வென்றார் கார்ல்ஸன். ஆட்டத்தில் பயமற்ற போக்கை அவர் கையாண்டார்.

கார்ல்ஸனின் ஆட்டம் குறித்து ட்விட் செய்துள்ள செஸ் வீரர் கேர் காஸ்பரோவ் '' இந்த ஆட்டம் கார்ல்ஸனுக்கு முன் பல வீரர்களை மன அழுத்ததுடன் ஆடி பார்த்துள்ளது. கார்ல்ஸனின் தொடர் செஸ் சாதனைகள் வியக்க வைக்கிறது. சிலர் வேகமாக ஆடினால் மோசமான நகர்வுகளைச் செய்வார்கள். ஆனால் கார்ல்ஸ‌ன் அப்படி செய்வதே இல்லை. இதுதான் அவர் வெல்வதற்கு காரணமாக உள்ளது" என்றார்.

டைபிரேக்கரில் அழுத்தம் இல்லாமல் ஆடுவது கார்ல்சனின் சிற‌ப்பான உத்திகளில் ஒன்று. கார்ல்ஸனை, 'மோஸார்ட் ஆஃப் செஸ்' என்று அவரது 13வது வயதில் வாஷிங்டன் போஸ்ட் பாராட்டியது.

"தோல்வி என்று முடிவு செய்துவிட்டால் பிறகு ஆடி பயனில்லை. ஆட்டத்தை விட்டு விலகுவதே மேல். கார்ல்சனின் அபாரமான ஆட்டம் பிரமிக்க வைத்தது" என்று கரோனா தெரிவித்தார்.

"நான் நினைத்தது போலவே எனக்கு நிறைய நல்ல வாய்ப்புகள் இருந்தன" என்று கார்ல்ஸன் தெரிவித்தார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மேற்கு ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற 3ம் வகுப்பு மாணவி!
மேற்கு ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற 3ம் வகுப்பு மாணவி!
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார் கார்ல்ஸன்!
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார் கார்ல்ஸன்!
செஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!
செஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!
சென்னையின் பிரக்கன்நந்தா உலகின் இரண்டாவது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்
சென்னையின் பிரக்கன்நந்தா உலகின் இரண்டாவது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்
உலக ப்ளிட்ஸ் சதுரங்க போட்டி: வெண்கலம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த்
உலக ப்ளிட்ஸ் சதுரங்க போட்டி: வெண்கலம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த்
Advertisement