சென்னையின் பிரக்கன்நந்தா உலகின் இரண்டாவது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்

Updated: 20 February 2019 14:40 IST

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல 3 நார்ம்களையும் 2500 ரேடிங்கினையும் பெற்றிருக்க வேண்டும்

Chennai
© Twitter

இத்தாலியில் நடைப்பெற்று வரும் சதுரங்க கிரெடைன் ஒபன்  தொடரில், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள 12 வயதான பிரக்னன்நந்தா உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற சாதைனையை புரிந்துள்ளார்.

சென்னையை சேர்ந்த 12 வயதேயான பிரக்னன்நந்தா,  இத்தாலியில் நடைப்பெற்று வந்த கிரெடைன் ஒபன் தொடரின் இறுதி போட்டியில் கிராண்ட் மாஸ்டர் ரோலாந்துடன் இணைந்து கலந்து கொண்டார். 8 சுற்றுகளின் முடிவில் 6.5 புள்ளிகளுடன் தரவரிசையின் முதல் இடத்தில் இருந்தனர்.

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல 3 நார்ம்களையும் 2500 ரேடிங்கினையும் பெற்றிருக்க வேண்டும். முதல் நார்மினை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைப்பெற்ற உலக ஜூனியர் சாம்பியன் போட்டியிலும்,  இரண்டாவது நார்மினை கடந்த ஆண்டு க்ரீஸில் நடைப்பெற்ற ஹெர்காலியோன் ஃபிஸர் மெமோரியல் தொடரிலும், மூன்றாவதாக இத்தாலியிலும் பெற்றுள்ளார்.

உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை மூன்று மாதங்களில் நழுவவிட்டார் பிரக்கன்நந்தா. இதற்கு முன்னதாக கடந்த 2002 ஆம் ஆண்டு,உக்ரைன் நாட்டை சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் 12 வயது 7 மாதங்கள் இருந்த நிலையில் கிராண்ட் மாஸ்டர் பெற்றார். இந்தியாவின் பிரக்கன்நந்தா 12 வயது 10 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

“பிரக்கன்நந்தா குறித்து என்னை மிகவும் கவர்ந்தது என்னவென்றால், வலிமையான வீரர் மட்டுமல்லாமல், நிதானமான ஆட்டதை வெளிபடுத்துபவராக உள்ளார். மேலும் கடினமான போட்டிகளை கூட எதிர்கொள்ளும் திறமை கொண்டவர். பல உச்சங்களை அடைவார் என நம்புகிறேன்” என்று இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டினார்.

நார்வேயின் மாக்னெஸ் கார்ல்ஸென் தனது 13 வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இந்தியாவின் முதல் கிரான்ஸ் மாஸ்டர் விஷ்வநாதன் ஆனந்த் தனது 18 வயதில் மூன்றாவது நார்ம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர்கள்

  • செர்ஜி கர்ஜாகின் (உக்ரெயின்) - 12 வயது 7 மாதங்கள்

  • பிரக்னன்நந்தா (இந்தியா) – 12 வயது 10 மாதங்கள்

  • நொடிர்பெக் அப்துசாட்டோரோவ் - (உஸ்பெக்கிஸ்தான்) – 13 வயது 1 மாதம்

  • பரிமர்ஜன் நெஜி (இந்தியா) – 13 வயது 4 மாதங்கள்

  • மேக்னஸ் கார்ல்ஸென் - (நார்வே) – 13 வயது 4 மாதங்கள்

Comments
ஹைலைட்ஸ்
  • உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை மூன்று மாதங்களில் நழுவவிட்டார்
  • இந்தியாவின் பிரக்கன்நந்தா 12 வயது 10 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம்
  • பல உச்சங்களை அடைவார் என நம்புகிறேன்: இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்
தொடர்புடைய கட்டுரைகள்
மேற்கு ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற 3ம் வகுப்பு மாணவி!
மேற்கு ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற 3ம் வகுப்பு மாணவி!
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார் கார்ல்ஸன்!
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தார் கார்ல்ஸன்!
செஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!
செஸ் ஒலிம்பியாட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!
சென்னையின் பிரக்கன்நந்தா உலகின் இரண்டாவது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்
சென்னையின் பிரக்கன்நந்தா உலகின் இரண்டாவது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்
உலக ப்ளிட்ஸ் சதுரங்க போட்டி: வெண்கலம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த்
உலக ப்ளிட்ஸ் சதுரங்க போட்டி: வெண்கலம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த்
Advertisement