ஆறாவது தங்கத்துக்கு குறி: இறுதிப் போட்டியில் மேரி கோம்!

Updated: 23 November 2018 10:12 IST

அரையிறுதி போட்டியில் வட கொரியாவின் கிம் ஹயாங் மீயை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

Women
இறுதிப்போட்டியில் மேரி கோம் சந்திக்கவுள்ள ஹன்னாவை, இந்த ஆண்டு போலந்து போட்டியில் மேரி கோம் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. © BFI

டெல்லியில் நடைபெற்று வரும் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதி போட்டியில் வட கொரியாவின் கிம் ஹயாங் மீயை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

35 வயதான மேரி கோம் 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.இந்த முறையும் இறுதிப்போட்டியில் வென்றால் உலகில் அதிக முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை பெறுவார். தற்போது 5 தங்கப்பதக்கங்களுடன் அயர்லாந்தின் கேட்டி டெய்லரும், மேரி கோமும் சமநிலையில் உள்ளனர்.இறுதிப் போட்டியில் மேரி கோம் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஹன்னா ஒக்ஹட்டாவை சந்திக்கிறார்.

இந்த வெற்றிக்கு பின் பேசிய மேரி கோம் " நான் ஏற்கெனவே கிம்மை ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வீழ்த்தியிருந்தேன். அப்போது அது ஒருதலை பட்சமாக அமைந்தது. தற்போது கிம்மை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

இறுதிப்போட்டியில் மேரி கோம் சந்திக்கவுள்ள ஹன்னாவை, இந்த ஆண்டு போலந்து போட்டியில் மேரி கோம் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுது சுற்று குறித்த கேள்விக்கு "நான் என் உத்திகளோடு களமிறங்குவேன். மீண்டும் அவரை வீழ்த்தி தங்கம் வெல்வேன்" என்றார்.

இந்தப் பட்டத்தை வென்றால் சொந்த மண்ணில் மேரி கோம் பெறும் இரண்டாவது சாம்பியம்ஷிப் தங்கமாக இருக்கும். இறுதிப்போட்டி சனிக்கிழமை நடக்கவுள்ளது.

இந்திய தரப்பில் 69 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லொவ்லினா  சென் நின் சின்னுக்கு எதிராக 29-27, 29-27, 28-28, 29-27, 30-26 என்ற கணக்கில் வீழ்ந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்!
2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்!
Advertisement