தாய்லாந்து ஓபனில் இந்தியா குத்துசண்டை வீரர்கள் அசத்தல்...!

Updated: 23 July 2019 15:21 IST

ஜூலை 27 வரை நடக்கும் இந்த தாய்லாந்து தொடரில் இந்தியா சார்பாக ஐந்து பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் பங்கேற்றுள்ளனர்.

Thailand Open: Seven Indian Boxers Reach Quarter-Finals
தீபக் (சிகப்பு) 5-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார் © Twitter

தாய்லாந்தில் சர்வதேச தாய்லாந்து குத்துசண்டை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம் வென்ற தீபக் (49 கிலோ), வெண்கல பதக்கம் வென்ற மனிஷா மவுன் (57 கிலோ) உட்பட ஏழு இந்தியா குத்துசண்டை வீரர்கள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

காலிறுதிக்கு தகுதி பெற்றவர்களில் நிகாத் ஷரின் (51 கிலோ), ஆஷிச் குமார் (75 கிலோ), மஞ்சு ராணி (48 கிலோ), பிரிஜேஷ் யாதவ் (48 கிலோ) ஆகியோரும் அடங்குவர்.

மோரோகன் மோர்தாஜியை 5-0 என எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார் தீபக். 75 கிலோ பிரிவில் அபிஷித் கான்கோக்ரியாவை 4-1 என வீழ்த்தினார் ஆஷிச் குமார்.

பெண்கள் 75 கிலோ பிரிவில் பக்யபதி கச்சாரி பை பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இலங்கையின் சஜிவானி ஸ்ரீமைலியை 5-0 என வீழ்த்தினார் மனிஷா.

மஞ்சு ராணி, நிகாத் ஷரின், பிரிஜேஷ் யாதவ் ஆகியோரும் தங்களது போட்டிகளில் 5-0 என வென்று காலிறுதிக்கு எளிதாக தகுதி பெற்றனர்.

37 நாடுகளில் இருந்து 247 குத்துசண்டை வீரர்கள் இந்த தாய்லாந்து குத்துசண்டை போட்டியில் பங்கேற்றனர். இந்த ஆண்டின் இறுதியில் நடக்க இருக்கும் உலக சாம்பியன்ஷிப்பிற்கு இந்த தொடர் ஒரு சிறந்த பயிற்சியாக பார்க்கப்படுகிறது.

ஜூலை 27 வரை நடக்கும் இந்த தாய்லாந்து தொடரில் இந்தியா சார்பாக ஐந்து பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் பங்கேற்றுள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • 37 நாடுகளில் இருந்து 247 குத்துசண்டை வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்
  • 75 கிலோ பிரிவில் பக்யபதி கச்சாரி பை பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
  • இந்த ஆண்டின் இறுதியில் உலக சாம்பியன்ஷிப் நடக்கவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
இளைஞர்களை ஊக்குவித்த மேரிகோம்... வீடியோ பகிர்ந்த விளையாட்டுத் துறை அமைச்சர்!
இளைஞர்களை ஊக்குவித்த மேரிகோம்... வீடியோ பகிர்ந்த விளையாட்டுத் துறை அமைச்சர்!
"இதுபோன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் கைக்குலுக்க விரும்பவில்லை" - மேரி கோம்
"இதுபோன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் கைக்குலுக்க விரும்பவில்லை" - மேரி கோம்
நிகாத் ஜரீனை தோற்கடித்து 2020 ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்குள் நுழைந்தார் மேரி கோம்!
நிகாத் ஜரீனை தோற்கடித்து 2020 ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்குள் நுழைந்தார் மேரி கோம்!
ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளுக்கான இறுதி போட்டிக்கு நிகாத் ஜரீன் முன்னேறினார்!
ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளுக்கான இறுதி போட்டிக்கு நிகாத் ஜரீன் முன்னேறினார்!
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதால் சுமித் சங்வான் இடைநீக்கம்
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதால் சுமித் சங்வான் இடைநீக்கம்
Advertisement