மூளையில் ஏற்பட்ட காயத்தால் இரண்டு நாட்களில் உயிரிழந்த இரு குத்துச்சண்டை வீரர்கள்!

Updated: 27 July 2019 11:29 IST

சாண்டிலன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, மூளையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்க ஆப்ரேஷன் செய்யப்பட்டது என்று மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார் அவர்.

Second Boxer In Two Days Dies From Head Injuries After Fight
அர்ஜென்டினா குத்துச் சண்டை வீரர் ஹுகோ சாண்டிலன் போட்டியில் போது ஏற்பட்ட காயத்தினால் நேற்று உயிரிழந்தார். © AFP

அர்ஜென்டினா குத்துச் சண்டை வீரர் ஹுகோ சாண்டிலன் போட்டியில் போது ஏற்பட்ட காயத்தினால் நேற்று உயிரிழந்தார். இரண்டும் நட்களுக்கு முன்பு ரஷ்ய குத்துச்சண்டை வீரர் மாக்சிம் தாதாஷேவ் இதே போன்று உயிரிழந்தார். 23 வயதான சாண்டிலன், 10 வது சுற்றின் முடிவை அறிவிக்கும் போது மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, மூளையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்க ஆப்ரேஷன் செய்யப்பட்டது என்று மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார் அவர்.

தாதாஷேவ் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் காயம் ஏற்பட்டு, பின்னர் கடந்த செவ்வாயன்று மூளை காயங்களால் உயிரிழந்தார். அவருக்கு வயது 28.

சாண்டிலன் அப்ரியூவுடன் விளையாடும் போது எந்த பிரச்னையும் இல்லாமல் தான் இருந்துள்ளார். ஆனால், முடிவுக்காக காத்திருந்த வேளையில் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர் வோர்ல்ட் பாக்சிங் கவுன்சில் நடத்திய லடினோ சில்வர் லைட்வெயிட் டைட்டில்காக போட்டியிட்டார்.

"ஹுகோவின் துக்கத்தில் அவரின் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் இணைவோம்," டபள்யூபிசி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

ஐந்து வாரங்களுக்கு முன்பு சாண்டிலன் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் ஆர்தெம் ஹருட்யுன்யானிடம் தோற்றார்.

சாண்டிலன் இதுவரை ஆடிய போட்டிகளில் 19 வெற்றிகள், எட்டு நாக்-அவுட், ஆறு தோல்விகள், இரண்டு போட்டிகள் நிறுத்தி வைப்பு மற்றும் இரண்டு போட்டி ட்ராவானது.

2015ம் ஆண்டு முதல் குத்துச்சண்டையில் ஈடுப்பட்டு வருகிறார். தென்னமெரிக்கன் சூப்பர் ஃபெதர் வெயிட் பட்டம் வென்றார். ஆனால், 2016 செப்டம்பரில் அந்த பட்டத்தை இழந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இளைஞர்களை ஊக்குவித்த மேரிகோம்... வீடியோ பகிர்ந்த விளையாட்டுத் துறை அமைச்சர்!
இளைஞர்களை ஊக்குவித்த மேரிகோம்... வீடியோ பகிர்ந்த விளையாட்டுத் துறை அமைச்சர்!
"இதுபோன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் கைக்குலுக்க விரும்பவில்லை" - மேரி கோம்
"இதுபோன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் கைக்குலுக்க விரும்பவில்லை" - மேரி கோம்
நிகாத் ஜரீனை தோற்கடித்து 2020 ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்குள் நுழைந்தார் மேரி கோம்!
நிகாத் ஜரீனை தோற்கடித்து 2020 ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்குள் நுழைந்தார் மேரி கோம்!
ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளுக்கான இறுதி போட்டிக்கு நிகாத் ஜரீன் முன்னேறினார்!
ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளுக்கான இறுதி போட்டிக்கு நிகாத் ஜரீன் முன்னேறினார்!
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதால் சுமித் சங்வான் இடைநீக்கம்
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதால் சுமித் சங்வான் இடைநீக்கம்
Advertisement