ஆறாவது தங்கம் வென்று மேரி கோம் உலக சாதனை!

Updated: 24 November 2018 17:03 IST

35 வயதான மேரி கோம் 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.

Women
உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மேரி கோம் உக்ரைனின் ஹன்னா ஒக்ஹட்டாவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். © AFP

டெல்லியில் நடைபெற்ற உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மேரி கோம் உக்ரைனின் ஹன்னா ஒக்ஹட்டாவை சந்தித்தார்.

35 வயதான மேரி கோம் 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.இந்த முறையும் இறுதிப்போட்டியில் வென்றால் உலகில் அதிக முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை பெறுவார் என்ற எதிர்பார்ப்போடு களமிறங்கினார் மேரி கோம்.  5 தங்கப்பதக்கங்களுடன் அயர்லாந்தின் கேட்டி டெய்லரும், மேரி கோமும் சமநிலையில் இருந்தார்.

இதற்கு முன் மேரி கோம்  ஹன்னாவை இந்த ஆண்டு போலந்து போட்டியிக் மேரி கோம் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிச் சுற்றில்  நான் என் உத்திகளோடு களமிறங்குவேன். மீண்டும் அவரை வீழ்த்தி தங்கம் வெல்வேன் என்றார் மேரி கோம்.

அதன்படி இன்று நடந்த இறுதிப்போட்டியில் முதல் செட்டில் ஹன்னா ஆதிக்கம் செலுத்தினாலும் இறுதியில் மேரி கோமே வென்றார். இறுதிப்போட்டியை 5-0 என்ற கணக்கில் வென்றார் மேரி கோம். இதன் மூலம் சர்வதேச அளவில் ஆறு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை பெற்றார்.

அயர்லாந்தின் காட்டி டெய்லரின் சாதனை முறியடித்தது மட்டுமின்றி தனது சொந்த மண்ணான இந்தியாவில் நடைபெற்ற இரண்டு சாம்பியன்ஷிப் தொடர்களிலும் மேரி கோம் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்!
2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்!
Advertisement