ஆறாவது தங்கத்துக்கு குறிவைக்கும் மேரி கோம்!

Updated: 15 November 2018 11:10 IST

கோம், ஆறாவது தங்கம் வென்று, கேட்டி டெய்லரின் அதிக தங்கம் வென்ற பெண் என்ற சாதனையை முறியடிப்பார் என்று அனைவரும் கணித்து வருகின்றனர்.

Mary Kom Eyes Historic Sixth Gold Medal In AIBA Women
48 கிலோ எடைபிரிவில் போட்டியிடும் மேரி கோம், சொந்த மண்ணில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பும் உள்ளது. © AFP

மேரி கோம் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார். 10 உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் நவம்பர் 10ம் தேதி துவங்கவுள்ளது. இதில் 72 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தத் தொடரை இந்தியா இரண்டாவது முறையாக நடத்துகிறது. சென்றமுறை நடத்தும் போது எட்டு மெடல்களுடன் முதலிடம் பிடித்த இந்தியா இம்முறையும் முதலிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

35 வயதான மேரி கோம். இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக திகழ்கிறார். 5 தங்கம் வென்றுள்ள கோம், ஆறாவது தங்கம் வென்று, கேட்டி டெய்லரின் அதிக தங்கம் வென்ற பெண் என்ற சாதனையை முறியடிப்பார் என்று அனைவரும் கணித்து வருகின்றனர்.

48 கிலோ எடைபிரிவில் போட்டியிடும் இவர், சொந்த மண்ணில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பும் உள்ளது. இந்த வருடம் காமன்வெல்த், இந்திய ஓப்பன், போலந்தில் நடைபெற்ற சர்வதேச தொடர்களில் தங்கம் வென்றுள்ளார்.

"இந்த பிரிவில் 2001 முதல் விளையாடும் பாக்ஸர்களை பார்த்துள்ளேன். அவர்களை நன்கு அறிவேன். புதிய வீரர்கள் வேகமாக உள்ளனர். அவர்களை அனுபவத்தால் வெல்வேன்" என்று மேரி கோம் கூறியுள்ளார்.

நவம்பர் 4 வரை நடைபெறும் இந்த போட்டி தொடரில் பல ஒலிம்பிக் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்!
2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்!
Advertisement