Boxing: உலக சாம்பியன்ஷிப்பின் காலிறுதிக்கு நான்கு இந்தியர்கள் தகுதி

Updated: 18 September 2019 11:55 IST

AIBA World Boxing Championships: அரையிறுதிக்கு இவர்கள் முன்னேறும் பட்சத்தில் பதக்கம் வெல்வது உறுதி செய்யப்படும். 

AIBA World Boxing Championships: Amit Panghal, 3 Other Indians Enter Quarterfinals
அமித பங்கல் தன் வெற்றியை பிரதமர் மோடிக்கு சமர்பித்தார் © Twitter

ரஷ்யாவில் நடைபெறும் ஏஐபிஏ உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப்பில் நான்கு இந்திய குத்துசண்டை வீரர்கள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். 52 கிலோ பிரிவில் ஆசிய சாம்பியனான அமித் பங்கல் பத்துஹான் சிட்ப்சியை 5-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

சிட்பிசியுடனான போட்டியை குறித்து அமித் தெரிவிக்கையில், ‘அனுபவமிக்க வீரர் ஒருவரை எதிர்த்து விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. தனது 69வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்' என்றார். காலிறுதியில் பிலிப்பினோ கர்லோவை சந்திப்பார் அமித்.

57 - 63 கிலோ பிரிவில் இந்தியாவின் மணிஷ் கவுசிக் 5-0 என மங்கோலியாவின் சின்சொரிங் பட்டர்சுக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ‘எனது பயிற்சியாளர்கள் வகுத்து தந்த திட்டத்தையே கடைபிடித்தேன். எண்ணிய முடிவு கிடைத்ததில் மகிழ்ச்சி' என்றார் மணிஷ். காலிறுதியில் மணிஷ், பிரேசிலின் வாண்டர்சென் டி ஒலிவீராவை எதிர்த்து விளையாடவுள்ளார்.

81 – 91 கிலோ பிரிவில் சஞ்சர் துர்சுனோவை 4-1 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் சஞ்சீத். ‘இவரை நான் இந்தியா ஓபனில் வென்றிருந்தேன். மிகவும் வலிமையான அவரை நான் எதிர்த்து நான் விட்ட குத்துகள் மூலம் வெற்றி பெற்றேன்' என்றார் சஞ்சீத். காலிறுதியில் ஜூலியோ செசா டொரஸை சந்திக்கவுள்ளார் சஞ்சீத்.

52 – 57 கிலோ பிரிவில் 3-2 என பின்லாந்தின் அர்ச்லன் கத்வனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் கவிந்தர் சிங். அரையிறுதிக்கு இவர்கள் முன்னேறும் பட்சத்தில் பதக்கம் வெல்வது உறுதி செய்யப்படும். 

Comments
ஹைலைட்ஸ்
  • இந்த குத்துசண்டை தொடர் ரஷ்யாவில் நடைபெறுகிறது
  • அரையிறுதிக்கு முன்னேறினால் பதக்கம் உறுதியாகும்
  • காலிறுதி போட்டிகள் இன்று நடைபெறவுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்
Boxing: உலக சாம்பியன்ஷிப்பின் காலிறுதிக்கு நான்கு இந்தியர்கள் தகுதி
Boxing: உலக சாம்பியன்ஷிப்பின் காலிறுதிக்கு நான்கு இந்தியர்கள் தகுதி
மூளையில் ஏற்பட்ட காயத்தால் இரண்டு நாட்களில் உயிரிழந்த இரு குத்துச்சண்டை வீரர்கள்!
மூளையில் ஏற்பட்ட காயத்தால் இரண்டு நாட்களில் உயிரிழந்த இரு குத்துச்சண்டை வீரர்கள்!
Advertisement