ஏழாவது பதக்கம் உறுதி : அரையிறுதியில் மேரி கோம்

Updated: 21 November 2018 11:24 IST

48 கிலோ எடைபிரிவில் போட்டியிடும் இவர், சொந்த மண்ணில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பும் உள்ளது.

AIBA Women
மேரி கோம், தங்கம் வென்றால் அயர்லாந்து வீராங்கனை கேட்டி டெய்லரின் அதிக தங்கம் வென்ற சாதனையை முறியடிப்பார். © Twitter

இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டிகளின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தத் தொடரில் அவர் தனது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதோடு சேர்த்தால் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் வெல்லும் 7வது பதக்கம் இதுவாகும். 

ஏற்கெனவே, ஐந்து தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்றுள்ள மேரி கோம் இந்த முறையும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தங்கம் வென்றால் அயர்லாந்து வீராங்கனை கேட்டி டெய்லரின் அதிக தங்கம் வென்ற சாதனையை முறியடிப்பார். அவர் 5 தங்கம் வென்றதே சாதனையாக இருந்தது. சென்ற முறை அதனை சமன் செய்த மேரி கோம் இந்த முறை அதனை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

35 வயதான மேரி கோம் சீனாவின் வூ யூ வை 5 - 0 என்ற கணக்கில் 48 கிலோ எடைப்பிரிவில் 30-27, 29-28, 30-27, 29-28, 30-27. என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். 

48 கிலோ எடைபிரிவில் போட்டியிடும் இவர், சொந்த மண்ணில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பும் உள்ளது. இந்த வருடம் காமன்வெல்த், இந்திய ஓப்பன், போலந்தில் நடைபெற்ற சர்வதேச தொடர்களில் தங்கம் வென்றுள்ளார்.

"இந்தப் பிரிவில் 2001 முதல் விளையாடும் பாக்ஸர்களை பார்த்துள்ளேன். அவர்களை நன்கு அறிவேன். புதிய வீரர்கள் வேகமாக உள்ளனர். அவர்களை அனுபவத்தால் வெல்வேன்" என்று மேரி கோம் கூறியுள்ளார். 

(With PTI inputs)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்!
2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்!
Advertisement