"தொடர்ந்து கேள்வி கேட்டவர்களுக்கு இப்போது பதிலளித்துள்ளேன்" - பி.வி.சிந்து!

Updated: 26 August 2019 17:19 IST

பிவி சிந்து, கடந்த இரண்டு சாம்பியன்ஷிப் இறுதியில் வெற்றி பெறாததால், தன்னை விமர்சித்தவர்களால், "கோபமாகவும், வருத்தமாகவும்" இருந்ததாக தெரிவித்தார்.

PV Sindhu Says World Championships Gold "My Answer To People Who Questioned Me"
உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளார் பி.வி.சிந்து. © AFP

பிவி சிந்து, கடந்த இரண்டு சாம்பியன்ஷிப் இறுதியில் வெற்றி பெறாததால், தன்னை விமர்சித்தவர்களால், "கோபமாகவும், வருத்தமாகவும்" இருந்ததாக தெரிவித்தார். நேற்று உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று "என்னை திரும்ப திரும்ப கேள்வி கேள்வி கேட்டவர்களுக்கு" பதிலளித்துள்ளதாக சிந்து கூறியுள்ளார். இரண்டு முறை வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து ஞாயிற்றுக்கிழமை முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்துடன் நீண்ட நாள் தங்கத்துக்கான காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தார். "இதுதான் என்னை திரும்ப திரும்ப கேள்வி கேட்டவர்களுக்கு நான் சொல்லும் பதில். என்னுடைய ராக்கெட் மூலமாகவும், வெற்றி மூலமாகவும் அவர்களுக்கு பதிலளிக்க நினைத்தேன். அவ்வளவு தான்," இறுதிப் போட்டியில் நொசோமி ஒகுஹாராவை வென்றதன் பின்னர், சிந்து பேட்மிண்டன் உலக கூட்டமைப்பின் (பிடபிள்யூஎஃப்) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

"முதல் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் இறுதிக்கு பிறகும், கடந்த வருடம் இறுதிக்கு பிறகும் நான் கோவமாகவும், வருத்ததுடனும் இருந்தேன். நான் என்னுடைய எல்லா உணர்வுகளையும் கடந்து வந்தேன், "சிந்து, இந்த ஒரு போட்டியை பெற முடியாதா?" என்று கேட்டு கொண்டேன். ஆனால், இன்று வந்தது, நான் என் விளையாட்டை விளையாடச் சொன்னேன், கவலைப்பட ஒன்றும் இல்லை, அது இன்று பலனளித்தது," என்றார்.

பி.வி.சிந்து பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளார். சிந்து முதல் ஆட்டத்தை 21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது ஆட்டத்தையும் 21-7 என்ற கணக்கில் வென்றார். சிந்து கடைசி போட்டியை 36 நிமிடங்களில் முடித்தார். போட்டியின் நடுவில் சிந்து, 7 புள்ளிகள் முன்னிலை பெற்று, கடைசியில் ஒகுஹராவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

2016 ரியோ விளையாட்டுப் போட்டிகளில் ஒலிம்பிக் வெள்ளி, கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு வெள்ளி மற்றும் கடந்த ஆண்டு பிடபள்யூஎஃப் உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகளையும் சிந்து வென்றுள்ளார்.

"எல்லோரும் நான் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பிறகு என் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் நான் போட்டிக்கு செல்லும் போது, நான் தங்கம் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்," என்றார் சிந்து.

"மக்கள் இப்போது, "சிந்து டோக்கியோ 2020யில் தங்கம் வெல்வீர்களா?"," என்று கேட்க தொடங்கியுள்ளனர்.

"ஒலிம்பிக்ஸில் நீண்ட தூரம் வரவில்லை, ஆனால், இது ஒருபடி முன்னேற்றம். ஒலிம்பிக் தகுதி போகிறது என்று எனக்குத் தெரியும், அதனால் நான் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன், ஆனால் இப்போது நான் அதை அனுபவிக்க விரும்புகிறேன், வேறு எதையும் யோசிக்க விரும்பவில்லை".

"பேட்மிண்டன் எனக்கு பேரார்வம் மிகுந்தது. அதனால், இன்னும் நிறைய பட்டங்கள் வெல்வேன்," என்று முடித்தார் சிந்து.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
டென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் நுழைந்தார் பி.வி.சிந்து!
டென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் நுழைந்தார் பி.வி.சிந்து!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
Korea Open: முதல் சுற்றில் பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெளியேறினர்!
Korea Open: முதல் சுற்றில் பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெளியேறினர்!
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
Advertisement