தாய்லாந்து ஓப்பனிலிருந்து வெளியேறிய பிவி சிந்து!

Updated: 31 July 2019 10:32 IST

இந்தியா சார்பாக பங்கேற்கும் வீராங்கனைகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்துள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா மட்டுமே இடம்பெற்றூள்ளர்.

Thailand Open: PV Sindhu Pulls Out, Saina Nehwal To Make Comeback After Injury Lay-Off
பிவி சிந்து ஏழு மாதங்களாக பட்டம் வெல்லாமல் இருக்கும் சோகம் தொடர்கிறது. © Twitter

பிவி சிந்து ஏழு மாதங்களாக பட்டம் வெல்லாமல் இருக்கும் சோகம் தொடர்கிறது. தாய்லாந்து ஓப்பன் தொடரிலிருந்து விலகுவதாக சிந்து கடைசி நேரத்தில் அறிவித்தார். இதனை பேட்மிண்டன் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா சார்பாக பங்கேற்கும் வீராங்கனைகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்துள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா மட்டுமே இடம்பெற்றூள்ளர். இவர் மருத்துவ சிகிச்சைகளால் இந்தோனேஷிய மற்றும் ஜப்பான் ஓப்பனை தவறவிட்டார்.
 
சாய்னா, காயத்துக்கு பிறகு பங்குபெறும் முதல் தொடர் இது. இதில் முன்னணி வீராங்கனைகள் பலர் விலகியுள்ளனர். ஜப்பானின் நசோமி, அகனே,தைவானின் சூ சிங் ஆகியோர் விலகியுள்ளனர்.

விலகலுக்க்கான காரணங்கள் தெளிவாக கூறப்படவில்லை. ஆனால் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியை மனதில் வைத்து இவர்கள் விலகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிந்து இந்தோனேசிய ஓப்பனில் ரன்னர் அப் பட்டத்தையும், ஜப்பான் ஓப்பனில் காலிறுதியையும் எட்டினார். இரு தொடரிலும் யமாகுஷியிடம் தோற்று வெளியேறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
"இந்தியாவின் பெருமை" - பிவி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி!
"இந்தியாவின் பெருமை" - பிவி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி!
"இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்" - தங்கம் வென்று நாடு திரும்பிய சிந்து!
"இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்" - தங்கம் வென்று நாடு திரும்பிய சிந்து!
"என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை" - வரலாற்று சாதனைக்கு பின் சிந்து!
"என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை" - வரலாற்று சாதனைக்கு பின் சிந்து!
"தொடர்ந்து கேள்வி கேட்டவர்களுக்கு இப்போது பதிலளித்துள்ளேன்" - பி.வி.சிந்து!
"தொடர்ந்து கேள்வி கேட்டவர்களுக்கு இப்போது பதிலளித்துள்ளேன்" - பி.வி.சிந்து!
Advertisement