தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன் 2018 : அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து

Updated: 14 July 2018 14:34 IST

தாய்லாந்தில் 2018ம் ஆண்டிற்காக ஓபன் பேட்மிட்டன் போட்டிகள் நடந்து வருகின்றன

Thailand Open 2018: PV Sindhu Beats Soniia Cheah To Enter Semi-Finals
© AFP

தாய்லாந்தில் 2018ம் ஆண்டிற்காக ஓபன் பேட்மிட்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியாவின் பிவி சிந்து மலேசியாவின் சோனியா செயாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், பிவி சிந்து – சோனியா செயா ஆகியோர் மோதினர். இதில், சோனியா செயாவை 21-17, 21-13 ஆகிய செட்டுகளில் பிவி சிந்து தோற்கடித்தார்.

இதன் மூலம் பிவி சிந்து அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக 2011ம் ஆண்டு பிவி சிந்து – சோனியா செயா இருவரும் மோதிக்கொண்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், சிந்து சோனியா செயாவிடம் அடைந்த தோல்விக்கு இதன் மூலம் பழி தீர்த்துக்கொண்டார்.

அடுத்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தோனேஷியாவின் கிரிகோரியா மரியஸ்காவை பிவி சிந்து எதிர்கொள்ள இருக்கிறார். இந்த போட்டியில் கலந்துகொண்ட இந்தியர்களில் சிந்துவைத் தவிர, அனைவரும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

காலிறுதி தகுதிப்போட்டிகளில் ஹாங்காங்கின் யிப் பூய் யின்னை 21-16,21-14 ஆகிய செட்டுகளில் பிவி் சிந்து தோற்கடித்து, வெற்றி பெற்றிருந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
டென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் நுழைந்தார் பி.வி.சிந்து!
டென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் நுழைந்தார் பி.வி.சிந்து!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
Korea Open: முதல் சுற்றில் பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெளியேறினர்!
Korea Open: முதல் சுற்றில் பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெளியேறினர்!
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
Advertisement