உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: வாழ்த்து மழையில் பி.வி.சிந்து!

Updated: 26 August 2019 11:22 IST

பி.வி.சிந்து பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளார்.

PV Sindhu Becomes First Indian To Clinch World Championships Gold, Wishes Pour In
உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளார் பி.வி.சிந்து. © AFP

பி.வி.சிந்து பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளார். சிந்து முதல் ஆட்டத்தை 21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது ஆட்டத்தையும் 21-7 என்ற கணக்கில் வென்றார். சிந்து கடைசி போட்டியை 36 நிமிடங்களில் முடித்தார். போட்டியின் நடுவில் சிந்து, 7 புள்ளிகள் முன்னிலை பெற்று, கடைசியில் ஒகுஹராவை வீழ்த்தி வெற்றி பெற்றார். சுவிட்சர்லாந்த் போட்டியில் சிந்து தங்கம் வென்ற பிறகு, உலகில் பல இடங்களிலிருந்து வாழ்த்து மழை பொழிய தொடங்கியது.

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெறும் 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த அரையிறுதியில் சீனாவின் சென் யூவுடன் மோதிய சிந்து, ஆபாரமான ஆட்டத்தால் 40 நிமிடங்களில் சென்யூவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். 

ஏற்கனவே 2 முறை இறுதி போட்டியில் தோல்வியை தழுவி, வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியிருந்த சிந்து, இந்த முறை தங்கபதக்கம் வெள்ளவாரா என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதைதொடர்ந்து, இன்று நடைபெற இறுதி போட்டியில் பி.வி.சிந்துவும் ஜப்பானின் நோசோமி ஒகுஹரா மோதினர். 

இந்த ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹராவை 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 38 நிமிடங்களில் ஆட்டத்தை நிறைவு செய்த பி.வி.சிந்து, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கணையை எளிதாக வீழ்த்தி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

2016 ரியோ விளையாட்டுப் போட்டிகளில் ஒலிம்பிக் வெள்ளி, கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு வெள்ளி மற்றும் கடந்த ஆண்டு பிடபள்யூஎஃப் உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகளையும் சிந்து வென்றுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
China Open: முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் பி.வி.சிந்து!
China Open: முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் பி.வி.சிந்து!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
டென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் நுழைந்தார் பி.வி.சிந்து!
டென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் நுழைந்தார் பி.வி.சிந்து!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
Advertisement