Listen to the latest songs, only on JioSaavn.com
 

சையது மோடி கோப்பை இறுதிப்போட்டி : சமீர் வெற்றி, சாய்னா தோல்வி!

Updated: 26 November 2018 12:49 IST

லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 16-21, 21-19, 21-14 என்ற கணக்கில் 1 மணி நேரம் 10 நிமிடத்தில் வென்றார்.

Syed Modi International: Sameer Verma Retains Title, Saina Nehwal Loses In Finals
முன்னதாக ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சமீர் 11-8 என்று ஆரம்பித்தாலும், தொடர்ந்து 5 புள்ளிகளை வென்று லூ காங்சூ முன்னிலை பெற்றதுமில்லாமல் 16-21 என்ற கணக்கில் முதல் செட்டை தனதாக்கினார். © AFP

சையது மோடி இன்டெர்நேஷனல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பேட்மின்டன் வீரர் சமீர் வர்மா சீனாவின் லூ காங்சூவை ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வென்று பட்டம் வென்றார். ஞாயிறன்று லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 16-21, 21-19, 21-14 என்ற கணக்கில் 1 மணி நேரம் 10 நிமிடத்தில் வென்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சீனாவின் ஹான் யூவிடம் 18-21, 8-21 என்ற கணக்கில் தோற்று இரண்டாமிடம் பிடித்தார்.

முன்னதாக ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சமீர் 11-8 என்று ஆரம்பித்தாலும், தொடர்ந்து 5 புள்ளிகளை வென்று லூ காங்சூ முன்னிலை பெற்றதுமில்லாமல் 16-21 என்ற கணக்கில் முதல் செட்டை தனதாக்கினார். 

இரண்டாவது செட்டில் அதே 11-8 முன்னிலை பெற்ற சமீர் தனது சிறப்பான ஆட்டத்தால் சீன வீரரை திணறடித்தார். பின்னர், அந்த செட்டை 21-19 என்றும் , அடுத்த செட்டை 21-14 என்றும் கைப்பற்றி பட்டம் வென்றார்.

இது சமீரின் மூன்றாவது பெரிய வெற்றி. இதற்கு முன் சுவிஸ் மற்றும் ஹைதராபாத் ஒப்பன்களை வென்றிருந்தார். 

அதேசமயம் பெண்கள் பிரிவில் ஹான் யூவிடம் சாய்னா நேவால் 34 நிமிடங்களில் வீழ்ந்தார். ஆடவர் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முறையே இந்தோனேஷியா மற்றும் மலேசியாவிடம்  இந்திய வீரர்கள் தோல்வியைத் தழுவினர். இந்தியா ஆடவர் ஒற்றையர் பிரிவில் மட்டுமே பட்டம் வென்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
BWF உலகப்போட்டிகள்: வாய்ப்பை இழந்தார் சமீர், இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து
BWF உலகப்போட்டிகள்: வாய்ப்பை இழந்தார் சமீர், இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து
சையது மோடி கோப்பை இறுதிப்போட்டி : சமீர் வெற்றி, சாய்னா தோல்வி!
சையது மோடி கோப்பை இறுதிப்போட்டி : சமீர் வெற்றி, சாய்னா தோல்வி!
சையது மோடி இன்டர்னேஷனல் : அரையிறுதியில் சய்னா நேவால்
சையது மோடி இன்டர்னேஷனல் : அரையிறுதியில் சய்னா நேவால்
ஆசிய போட்டிகள் 2018: பதக்கங்களை குவிக்கக் காத்திருக்கும் கிடாம்பி ஸ்ரீகாந்த்!
ஆசிய போட்டிகள் 2018: பதக்கங்களை குவிக்கக் காத்திருக்கும் கிடாம்பி ஸ்ரீகாந்த்!
Advertisement