BWF உலகப்போட்டிகள்: வாய்ப்பை இழந்தார் சமீர், இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து

Updated: 15 December 2018 15:33 IST

உலகின் 6ம் நிலை வீராரான சிந்து 8ம் நிலையில் உள்ள இன்டனனை வீழ்த்தியுள்ளார். சீனாவில் நடக்கும் இந்தத் தொடரை சிந்து வெல்ல வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

BWF World Tour Final 2018, Sameer Verma vs Shi Yuqi Men’s Singles Semi-final Live Score: PV Sindu Beats Ratchanok Intanon, Sameer Verma Loses To Shi Yuqi
அரையிறுதியில் இன்டானனை வீழ்த்தி BWF உலகப்போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் பி.வி.சிந்து © AFP

இந்தியன் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து மூன்று வெற்றிகள் பெற்று இன்று நடந்த அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் இன்டானனை வீழ்த்தி BWF உலகப்போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

தாய்லாந்தின் இன்டானனை அரையிறுதியில் எதிர்கொண்ட சிந்து முதல் சுற்றில் 21-16 என்ற செட்கணக்கிலும், இரண்டாவது சுற்றில் மிகவும் போராடி 25-23 என்ற கணக்கிலும் வீழ்த்தினார். இதன் மூலம் 2018 BWF உலகப்போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் சிந்து.

உலகின் 6ம் நிலை வீராரான சிந்து 8ம் நிலையில் உள்ள இன்டனனை வீழ்த்தியுள்ளார். சீனாவில் நடக்கும் இந்த தொடரை சிந்து வெல்ல வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் 5 இறுதிப்போட்டிகளில் ஆடியுள்ள சிந்து ஒரு பட்டத்தைக்கூட வெல்லவில்லை. உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் கேம்ஸ் மற்றும் ஏசியன் கேம்களில் சிந்து பட்டம் வெல்லவில்லை. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நொஸொமி ஒகுஹாராவை எதிர்கொள்கிறார்.

இந்தியன் பேட்மின்டன் வீரர் சமீர் BWF உலகப்போட்டிகளின் ஆடவர் அரையிறுதி போட்டியில் தோல்வியுற்றார். சீனாவை சேர்ந்த ஷி யுகியை அரையிறுதியில் எதிர்கொண்ட சமீர் முதல் சுற்றில் 21-12 என்ற கணக்கில் வென்றார்.

அதன்பின் இரண்டாவது செட்டில் 20-22, மூன்றாவது செட்டில் 17-21 என அடுத்தடுத்து இரண்டு செட்களை இழந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
"இந்தியாவின் பெருமை" - பிவி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி!
"இந்தியாவின் பெருமை" - பிவி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி!
"இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்" - தங்கம் வென்று நாடு திரும்பிய சிந்து!
"இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்" - தங்கம் வென்று நாடு திரும்பிய சிந்து!
"என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை" - வரலாற்று சாதனைக்கு பின் சிந்து!
"என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை" - வரலாற்று சாதனைக்கு பின் சிந்து!
"தொடர்ந்து கேள்வி கேட்டவர்களுக்கு இப்போது பதிலளித்துள்ளேன்" - பி.வி.சிந்து!
"தொடர்ந்து கேள்வி கேட்டவர்களுக்கு இப்போது பதிலளித்துள்ளேன்" - பி.வி.சிந்து!
Advertisement