இந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்

Updated: 21 March 2019 13:59 IST

29 வயதான சாய்னா ஆல் இங்கிலாந்து தொடரிம் போது இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்தவாரம் சுவிஸ் ஓப்பனிலிருந்து வெளியேறினார்.

India Open: Saina Nehwal Withdraws From India Open
2015ம் ஆண்டு இந்தியன் ஓப்பன் பட்டத்தை சாய்னா வென்றிருந்தார். © AFP

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் டெல்லியில் துவங்கவுள்ள இந்தியன் ஓப்பன் பேட்மிண்டன் தொடரிலுருந்து விலகியுள்ளார். 29 வயதான சாய்னா ஆல் இங்கிலாந்து தொடரின் போது இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்தவாரம் சுவிஸ் ஓப்பனிலிருந்து வெளியேறினார்.

சிகிச்சைக்கு பின் பேட்மிண்டன் அசோசியேசன் ஆஃப் இந்தியாவிடன் அவர் 3,50,000 தொடரில் ஆடவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பேட்மிண்டன் அசோஷியேஷன் அதிகாரி "சாய்னாவுக்கு ஆல் இங்கிலாந்து தொடரிலிருந்தே உடல்நலக்குறைவு இருந்தது" என்று கூறினார்.

கடந்த வாரம் ஆல் இங்கிலாந்து தொடரின் காலிறுதிக்கு தகுதி பெற்ற சாய்னா, உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

கடந்த வாரம் சாய்னா வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ஆல் இங்கிலாந்து தொடரில் சில போட்டிகளை வலியை பொறுத்துக் கொண்டு ஆடியதாகவும், சுவிஸ் தொடரை மறுத்து இந்தியாவில் சிகிச்சை எடுக்க போவதாகவும் கூறியிருந்தார்.

சாய்னாவை மருத்துவர்கள் ஓய்வு எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

2015ம் ஆண்டு இந்தியன் ஓப்பன் பட்டத்தை சாய்னா வென்றிருந்தார். தற்போது தொடரில் இடம்பெற்றிருக்கும் ஒரே வீராங்கனை பிவி சிந்து மட்டும் தான்.

Comments
ஹைலைட்ஸ்
  • இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார் சாய்னா
  • சாய்னா, உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்
  • 2015ம் ஆண்டு இந்தியன் ஓப்பன் பட்டத்தை சாய்னா வென்றிருந்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்
இந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்
புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து
புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து
ரன்வீருடன் செல்ஃபி... ராம்ப்வாக்... ட்விட்டரை அசத்தும் பிவி சிந்து!
ரன்வீருடன் செல்ஃபி... ராம்ப்வாக்... ட்விட்டரை அசத்தும் பிவி சிந்து!
"இரண்டு வருடம் கழித்து பட்டம் வென்றது அதிர்ஷடம் தான்" சாய்னா நேவால்!
"இரண்டு வருடம் கழித்து பட்டம் வென்றது அதிர்ஷடம் தான்" சாய்னா நேவால்!
பேட்மிண்டன் : இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் சாய்னா நெஹ்வால் சாம்பியன்
பேட்மிண்டன் : இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் சாய்னா நெஹ்வால் சாம்பியன்
Advertisement