பேட்மிண்டன் : இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் சாய்னா நெஹ்வால் சாம்பியன்

Updated: 27 January 2019 16:20 IST

இறுதிப் போட்டியின்போது சாய்னாவை எதிர்த்து நின்ற கரோலினா மெரின் ரிட்டைர்டு ஹர்ட் ஆனார். இதையடுத்து சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Indonesia Masters: Saina Nehwal Wins Title After Carolina Marin Retires Hurt In 1st Game
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சாய்னா நெஹ்வால் (Saina Nehwal). © AFP/File Photo

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில்  ஸ்பெயினின் கரோலினா மெரின் காயம் காரணமாக போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப்போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மெரினை எதிர்கொண்டார். 

முதல் செட் விளையாடிக் கொண்டிருந்தபோது 10-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் கரோலினா மெரின் முன்னிலையில் இருந்தார். அப்போது மெரினின் வலது தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து சாய்னா நெஹ்வால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

வெற்றிக்கு பின்னர் சாய்னா நெஹ்வால் கூறுகையில், ''இந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இப்படி போட்டியின் முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. இது நல்ல சம்பவமும் கிடையாது. மெரின் எனக்கு கடும் சவாலாக இருந்தார். சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், துரதிருஷ்டவசமாக அவருக்கு காயம்ம ஏற்பட்டு விட்டது. 

கடந்த சில ஆண்டுகளாக எனக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அதில் இருந்து உடனடியாக மீள்வதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்வேன். இந்த நேரத்தில் எனது பயிற்சியாளர், உடல் நல நிபுணர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீனாவின் பிங்ஜியாவுடன் சாய்னா மோதினார். இதில் 18-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் சாய்னா வெற்றி பெற்றிருந்தார். 

Comments
ஹைலைட்ஸ்
  • முதல் செட்டிலேயே ரிட்டைர்டு ஹர்ட் ஆனால் மெரின்
  • இந்தாண்டில் சாய்னா வெல்லும் முதல் பட்டம் இது.
  • மெரின் கடும் சவாலாக இருந்தார் என்று சாய்னா கூறியுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
தாய்லாந்து ஓபன் 2019: 2வது சுற்றில் நாக் அவுட்டான சாய்னா நேவால், ஶ்ரீகாந்த்!
தாய்லாந்து ஓபன் 2019: 2வது சுற்றில் நாக் அவுட்டான சாய்னா நேவால், ஶ்ரீகாந்த்!
தாய்லாந்து ஓப்பனிலிருந்து வெளியேறிய பிவி சிந்து!
தாய்லாந்து ஓப்பனிலிருந்து வெளியேறிய பிவி சிந்து!
தாய்லாந்த் ஓபனில் சாதிப்பார்களா இந்தியா வீரர்கள்?
தாய்லாந்த் ஓபனில் சாதிப்பார்களா இந்தியா வீரர்கள்?
இந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்
இந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்
புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து
புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து
Advertisement