சையது மோடி இன்டர்னேஷனல் : அரையிறுதியில் சய்னா நேவால்

Updated: 24 November 2018 17:23 IST

சாய்னா நேவால், அரையிறுதியில் இந்தோனேஷியாவின் ருசெல்லி ஹார்ட்வானை எதிர்கொள்கிறார்.

Syed Modi International: Saina Nehwal, Sameer Verma Enter Semi-Finals
அரையிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் இந்திய வீராங்கனையான ரித்துபாமா தாஸை 36 நிமிடங்களில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார் சாய்னா நேவால். (File picture) © AFP

சாய்னா நேவால் சையது மோடி சர்வதேச போட்டி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் இந்திய வீராங்கனையான ரித்துபாமா தாஸை 36 நிமிடங்களில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.  21-19, 21-14 என்ற கணக்கில் வென்ற சாய்னா. அரையிறுதியில் இந்தோனேஷியாவின் ருசெல்லி ஹார்ட்வானை எதிர்கொள்கிறார். 

முன்னதாக 5-11 என்று பிந்தங்கியிருந்த சாய்னா, தொடர்ச்சியாக 7 புள்ளிகளை வென்று முன்னிலை பெற்றார். பின்னர், முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் வென்றார். 

இரண்டாவது செட்டின் பாதியில் 11-9 என்ற முன்னணியில் சாய்னா இருந்தார், பின்னர் அந்த செட்டை 21-14 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா சீனாவின் ஸோகூ ஸீகியை 21-18, 21-11 என்ற செட்கணக்கில் வென்று முதல் நான்கு இடங்களுக்குள் நுழைந்தார். 

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரான்கிரெட்டி மற்றும் அஷ்வின் பொன்னப்பா இணை இந்தோனேஷிய இணையை 20-22, 21-17, 21-11 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர் பாருபள்ளி காஷ்யப் தாய்லாந்தின் தம்மாஸின்னிடம் 16-21, 19-21 என்ற செட் கணக்கில் 44 நிமிடங்களில் தோற்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
நடுவரின் தவறான முடிவை விமர்சித்த சாய்னா நேவால்!
நடுவரின் தவறான முடிவை விமர்சித்த சாய்னா நேவால்!
Advertisement