நடுவரின் தவறான முடிவை விமர்சித்த சாய்னா நேவால்!

Updated: 24 August 2019 14:31 IST

பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால் டென்மார்க்கின் மியாவிடம் தோல்வியுற்றார்.

Saina Nehwal, Parupalli Kashyap Slam "Sick" Umpiring During BWF World Championships
ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் 52 போட்டி புள்ளிகள் ஆடப்பட்டன. இந்த போட்டி ஒளிப்பரப்பு இல்லாத 4வது கோர்ட்டில் நடைபெற்றது. © AFP

பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால் டென்மார்க்கின் மியாவிடம் தோல்வியுற்றார். 21-15, 25-27, 12-21 என்ற கணக்கில் தோல்வியுற்றதற்கு நடுவர்களின் முடிவே காரணம் என்று கூறியுள்ளார். இதற்கு சாய்னாவின் கணவர் பாருபள்ளி காஷ்யப் ட்விட்டரில் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார். இரண்டு புள்ளிகளை நடுவர்கள் வழங்கத்தவறியது வருத்தமளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், நிறைய நடுவர்களின் தவறுகள் இடம்பெறுகின்றன. உலக சாம்பியன்ஷிப்பில் ரிவியூக்கள் இல்லாதது விளையாட்டின் உத்வேகத்தை குறைக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான சாய்னாவும் சிறுது நேரத்தில் தனது ட்விட் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

"இன்னும் அந்த இரண்டு புள்ளிகளை நடுவர்கள் தவறாக அளித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போட்டிக்கு நடுவே பேசிய நடுவர்கள் அம்பயரின் வேலையில் தலையிடாதீர்கள் என்றனர். ஆனால் நடுவர்கள் போட்டியில் அதிகப்படியாக செயல்படுவது வேதனையளிக்கிறது" என்றார்.

ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் 52 போட்டி புள்ளிகள் ஆடப்பட்டன. இந்த போட்டி ஒளிப்பரப்பு இல்லாத 4வது கோர்ட்டில் நடைபெற்றது. அதனால் ரிவியூ சிஸ்டம் இல்லாமல் போனது.

மற்ற போட்டியில் பிவி சிந்து அமெரிக்காவின் பெய்வானை  21-14, 21-6  வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

சிந்து சீனாவின் டை சூ யிங்கை காலிறுதியில் எதிர்கொள்கிறார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"உலகில் சிறந்த மனைவி" - முதல் திருமண ஆண்டில் சாய்னாவுக்கு வாழ்த்து தெரிவித்த காஷ்யப்
"உலகில் சிறந்த மனைவி" - முதல் திருமண ஆண்டில் சாய்னாவுக்கு வாழ்த்து தெரிவித்த காஷ்யப்
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
Advertisement