"இரண்டு வருடம் கழித்து பட்டம் வென்றது அதிர்ஷடம் தான்" சாய்னா நேவால்!

Updated: 03 February 2019 18:09 IST

சாய்னா நேவால் 2019ம் ஆண்டு இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார்

Saina Nehwal Happy With Super Series Title Win After Marriage, Calls It "Dream Run"
மார்ச் 6 முதல் 10 வரை நடக்கும் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கிறார் சாய்னா. © Twitter

சாய்னா நேவால் 2019ம் ஆண்டு இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார். கரோலினா மரின் காயத்தால் ஆட்டத்திலிருந்து பாதியில் விலக பட்டம் வென்றார், சாய்னா. கடந்த இரண்டு ஆண்டுகளில் சாய்னாவின் முதல் பட்டம் இது.மேலும் இது பாருபள்ளி காஷ்யப்புடனான திருமணத்துக்கு பின் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனை சாய்னா அதிர்ஷமானது என்று குறிபிட்டுள்ளார். மேலும் எல்லாமே சரியாக அமைந்தது. இது என் கனவு என்றார். "திருமணத்துக்கு பிறகுதான் இரண்டு ஆண்டு காத்திருப்பு நினவாகும்" என்று எதிர்பார்க்கவில்லை என்றார். 

சூப்பர் சீரிஸ் பட்டம் வென்ற போது என்ன மகிழ்ச்சியில் இருந்தேன். அதே போல் இன்றும் இருக்கிறது. கரோலின் காயம் எனக்கு பதக்க வாய்ப்பை தந்தது அதிர்ஷம்தான் என்றார். 

மார்ச் 6 முதல் 10 வரை நடக்கும் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் சாய்னா, பெரிய தொடர்களை கவனமாக அணுக வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு முன் கவுகாத்தியில் சீனியர் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • சாய்னா நேவால் 2019ம் ஆண்டு இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார்
  • கரோலினா மரின் காயத்தால் ஆட்டத்திலிருந்து பாதியில் விலகினார்
  • இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கிறார் சாய்னா
தொடர்புடைய கட்டுரைகள்
தாய்லாந்து ஓபன் 2019: 2வது சுற்றில் நாக் அவுட்டான சாய்னா நேவால், ஶ்ரீகாந்த்!
தாய்லாந்து ஓபன் 2019: 2வது சுற்றில் நாக் அவுட்டான சாய்னா நேவால், ஶ்ரீகாந்த்!
தாய்லாந்து ஓப்பனிலிருந்து வெளியேறிய பிவி சிந்து!
தாய்லாந்து ஓப்பனிலிருந்து வெளியேறிய பிவி சிந்து!
தாய்லாந்த் ஓபனில் சாதிப்பார்களா இந்தியா வீரர்கள்?
தாய்லாந்த் ஓபனில் சாதிப்பார்களா இந்தியா வீரர்கள்?
இந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்
இந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்
புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து
புல்வாமா தாக்குதலுக்கு விமானப்படையின் பதிலடி: விளையாட்டு வீரர்கள் வாழ்த்து
Advertisement