சாய்னா - காஷ்யப் இந்தியாவின் பேட்மின்டன் ஜோடிக்கு திருமணம்!

Updated: 15 December 2018 09:58 IST

Saina Nehwal Wedding: இந்திய பேட்மின்டன் வீரர்கள் சாய்னா நேவால் மற்றும் பருபள்ளி காஷ்யப் இருவரும் திருமணம் செய்து கொண்ட பதிவை இன்று ட்விட்டரில் அறிவித்தனர்

Saina Nehwal Wedding: Saina Nehwal, Parupalli Kashyap Tie The Knot, Announce On Twitter
© Twitter

 

இந்திய பேட்மின்டன் வீரர்கள் சாய்னா நேவால் மற்றும் பருபள்ளி காஷ்யப் இருவரும் திருமணம் செய்து கொண்ட பதிவை இன்று ட்விட்டரில் அறிவித்தனர். சாய்னாவின் திருமணம் தான் இன்று நாட்டின் மிகப்பெரிய செய்தியாக இருந்தது. இதற்கு முன்னதாக சில அமைச்சர்களையும், பயிற்சியாளர் கோபிசந்தையும் சந்தித்து அழைப்பிதழ் அளித்த புகைப்படம் இணையத்தில் பரவியது. 2005லிருந்து இருவரும் கோபிசந்திடம் பயிற்சி பெற்று வந்தனர். சாய்னா தங்களது திருமணத்தை அக்டோபரில் அறிவித்தார்.

சினிமா நடிகர் சிரஞ்சீவி, ஆளுநர் நரசிம்மன் மற்றம் விமலா நரசிம்மன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சாமுண்டேஸ்வர ராவ், ஹைத்ராபாத் ஹண்டர்ஸின் உரிமையாளர் ராவ், கோபிசந்த ஆகியோருடனான புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். இருவரது பேட்மின்டன் வாழ்க்கையை கருத்தில் கொண்டு 2007லிருந்து காதலித்த இவர்கள் திருமணத்தை தள்ளி வைத்திருந்தனர்.

 

2018ல் காமன்வெல்த் ஆட்டத்தில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா தங்கம் வென்றார். மேலும் 20 தொடர்களில் தங்கம் வென்றுள்ளார். மேலும் ஒலிம்பிக் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப் வெள்ளி என புகழில் உச்சத்தில் உள்ளார் சாய்னா. ஆடவர் பிரிவில் காஷ்யப்பும் உலக தரவரிசையில் 6ம் இடம் வரை சென்றார்.

சமீபத்தில் விளையாட்டு பிரபலங்களின் திருமணங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திருமணமாக இது இருந்தது. 2010ல் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை சானியா மிர்ஸாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை 2017ம் ஆண்டு இந்திய கேப்டன் விராட் கோலியும் திருமணம் செய்து கொண்டனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
நடுவரின் தவறான முடிவை விமர்சித்த சாய்னா நேவால்!
நடுவரின் தவறான முடிவை விமர்சித்த சாய்னா நேவால்!
Advertisement