உலக பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

Updated: 16 December 2018 12:39 IST

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் வென்றார்

BWF World Tour Finals 2018, PV Sindhu vs Nozomi Okuhara Women
© AFP

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் வென்றார்.

சீனாவின் குவாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பானின் ஒகுஹாவை 21-19, 21- 17 என்ற கணக்கில் வென்றார்.

வேர்ல்டு சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்னர் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் பி.வி.சிந்து.

முன்னதாக, அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை 21-16, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் சிந்து. இதன்மூலம் உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தொடர்ந்து 2-ஆவது முறையாக முன்னேறினார்.

இதைத்தொடர்ந்து இன்று நடந்த இறுதிப்போட்டியில், தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை உடன் பலப்பரீட்சை நடத்தினார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-19, 21-17 என நேர்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்
இந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்
ரன்வீருடன் செல்ஃபி... ராம்ப்வாக்... ட்விட்டரை அசத்தும் பிவி சிந்து!
ரன்வீருடன் செல்ஃபி... ராம்ப்வாக்... ட்விட்டரை அசத்தும் பிவி சிந்து!
இந்தோனேசிய ஓபன்: காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்!
இந்தோனேசிய ஓபன்: காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்!
உலக பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து
உலக பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து
BWF உலகப்போட்டிகள்: வாய்ப்பை இழந்தார் சமீர், இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து
BWF உலகப்போட்டிகள்: வாய்ப்பை இழந்தார் சமீர், இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து
Advertisement