வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!

Updated: 30 August 2019 18:50 IST

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிவி சிந்து, திருப்பதியில் இருக்கும் ஶ்ரீ வெங்கடேஸ்வர கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

PV Sindhu Visits Tirupati Temple After World Championships Triumph
பிவி சிந்து, திருப்பதியில் இருக்கும் ஶ்ரீ வெங்கடேஸ்வர கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். © ANI

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிவி சிந்து, திருப்பதியில் இருக்கும் ஶ்ரீ வெங்கடேஸ்வர கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். கோயிலுக்கு சென்ற சிந்து, சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க வெல்ல உறுதுணையாக இருந்த கடவுளுக்கு நன்று தெரிவித்தார். "எதிர்வரும் போட்டிகளில் நான் சிறப்பாக ஆடவேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன்," என்றார் சிந்து. ஞாயிறன்று நடந்த இறுதி போட்டியில் பி.வி.சிந்துவும் ஜப்பானின் நோசோமி ஒகுஹரா மோதினர். இந்த ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹராவை 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 

24 வயதான சிந்து, இதற்கு முன்பு நான்கு பதக்கங்கள் வென்றுள்ளார். 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் வெண்கலமும், 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் வெள்ளியும் வென்றுள்ளார்.

2016 ரியோ விளையாட்டுப் போட்டிகளில் ஒலிம்பிக் வெள்ளி, கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு வெள்ளி மற்றும் கடந்த ஆண்டு பிடபள்யூஎஃப் உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகளையும் சிந்து வென்றுள்ளார்.

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சமுந்தேஷ்வரிநாத் மற்றும் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோரும் கோயிலுக்கு சென்றனர்.

கோயில் அதிகாரிகள் இவர்கள் அனைவரையும் சிறப்பாக வரவைத்தனர். பூசாரிகள் அவர்களுக்கு வேத மந்திரங்களுடன் ஆசீர்வதித்தனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
China Open: முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் பி.வி.சிந்து!
China Open: முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் பி.வி.சிந்து!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
டென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் நுழைந்தார் பி.வி.சிந்து!
டென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் நுழைந்தார் பி.வி.சிந்து!
Advertisement