ஜப்பான் ஒப்பன் காலிறுதியில் பிவி சிந்து, சாய் பிரணித்!

Updated: 25 July 2019 20:27 IST

முதல் சுற்றில் சக வீரர் கடாம்பி ஶ்ரீகாந்தை வெளியேற்ரிய இவர் அடுத்த சுற்றில் 9-21, 15-21 என்ற கணக்கில் டென்மார்க் வீரர் ரஸ்மஸிடம் வீழ்ந்தார். 

PV Sindhu, Sai Praneeth Enter Japan Open Quarters; HS Prannoy Loses
இந்தியன் பேட்மின்டன் வீராங்கனைகள் பிவி சிந்து மற்றும் சாய் ப்ரணித் இருவரும் ஜப்பான் ஒப்பனின் காலிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். © AFP

இந்தியன் பேட்மின்டன் வீராங்கனைகள் பிவி சிந்து மற்றும் சாய் ப்ரணித் இருவரும் ஜப்பான் ஒப்பனின் காலிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இரண்டாவது சுற்றுப்போட்டிகளை டோக்கியோவில் வென்ற அவர்கள் காலிறுதிக்குள் நுழைந்தனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அய ஒஹொரியை எதிர்த்து ஆடிய சிந்து 11-21, 21-10, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஜப்பான் வீராங்கனை ஒஹோரிக்கு எதிராக 8-0 என்ற வெற்ரி கணக்கை கொண்டுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ப்ரணித் உலகின் 11ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டாவை முதல் சுற்ரிலும், இரண்டாவது சுற்றில் கன்டா சுனேயாமாவை 21-13, 21-16 என்ற கணக்கிலும் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். 

இந்தியாவின் மற்ரொரு வீரரான பிரனோய்க்கு இது அதிருப்தியாக போட்டித் தொடராக அமைந்தது. முதல் சுற்றில் சக வீரர் கடாம்பி ஶ்ரீகாந்தை வெளியேற்ரிய இவர் அடுத்த சுற்றில் 9-21, 15-21 என்ற கணக்கில் டென்மார்க் வீரர் ரஸ்மஸிடம் வீழ்ந்தார். 

ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் ரான்கிரெட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி ஆகியோர் சீன இணையை 15-21, 21-11,21-19  என்ற கணக்கில் வீழ்த்தி கடைசி எட்டு சுற்ருக்குள் நுழைந்தனர். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Malaysia Masters: பி.வி.சிந்து, சாய்னா நேவால் காலிறுதியில் வெளியேறினர்
Malaysia Masters: பி.வி.சிந்து, சாய்னா நேவால் காலிறுதியில் வெளியேறினர்
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
BWF World Tour Finals: போட்டியில் தோற்று வெளியேறிய பி.வி.சிந்து!
BWF World Tour Finals: போட்டியில் தோற்று வெளியேறிய பி.வி.சிந்து!
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Advertisement