தாய்லாந்த் ஓபனில் சாதிப்பார்களா இந்தியா வீரர்கள்?

Updated: 30 July 2019 12:54 IST

தாய்லாந்து ஓபனில் விளையாட உள்ளார் சாய்னா நேவால்.

PV Sindhu Eyeing Strong Comeback In Thailand Open
2019 யில் இதுவரை எந்த பட்டத்தையும் சிந்து வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது © AFP

இந்தோனேசியா ஓபனில் இறுதி சுற்றில் தோல்வி, ஜப்பான் ஓபனில் காலிறுதியில் தோல்வி என அடுத்தடுத்து தோல்வி கண்டு ஏமாற்றமடைந்தார் இந்திய வீராங்கனை பிவி சிந்து. இந்தோனேசியா, ஜப்பான் ஓபன் ஆகிய இரண்டு ஓபன்களிலும் ஜப்பானின் யம்மாகூச்சியிடம் தான் தோல்வியடைந்தார் சிந்து.  

இந்நிலையில் தற்போது தாய்லாந்து ஓபனில் பங்கேற்க உள்ள பிவி சிந்து, சாம்பியன் பட்டத்தை முனைப்பில் உள்ளார். 2019 யில் இதுவரை எந்த பட்டத்தையும் சிந்து வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து ஓபனின் முதல் சுற்றில் சீனாவின் ஹான் யூவை எதிர்கொள்ள இருக்கிறார் சிந்து. அவர் வெற்றி பெற்று அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறும் பட்சத்தில் காலிறுதியில் ஆறாவது நிலை வீராங்கனையான தாய்லாந்தின் ராட்சனோக்கை சந்திப்பார் சிந்து.

உலக சாம்பியன்ஷிப்பிற்கு தயாராகும் எண்ணத்தில் இந்தோனேசியா, ஜப்பான் ஓபன்களில் பங்கேற்காமல் இருந்தார் இந்தியாவின் சாய்னா நேவால். தாய்லாந்து ஓபனில் விளையாட உள்ளார் சாய்னா நேவால்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் கெந்தோ மோமோடாவை சந்திக்கிறார் சுபாங்கர் தே. அதே நேரம் பி சாய் பிரணீத், தாய்லாந்தின் கந்தபோன் வாங்சரூணை எதிர்கொள்கிறார்.

முதல் சுற்றில் இந்தியாவின் கிடாபி ஸ்ரீகாந்த் குவாலிபையரையும் பிரணாய் ஹாங்காங்கின் வோங் விங் கீ வின்செண்ட்டை சந்திக்கிறார். சமீர் வெர்மா மலேசியாவின் லீ சீ ஜியாவையும் காஷ்யாப் சீனாவின் சோ சி கியூவையும் எதிர்கொள்கின்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியா இணையான சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சீராக் செட்டி மற்றொரு இந்தியா இணையான மனு அத்ரி – சுமீத் ரெட்டியை சந்திக்கின்றனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா – சிக்கி ரெட்டி இணையானது சீனாவின் லி வென் மீ – சிங் யூவை சந்திக்கின்றனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணாவ் ஜெர்ரி சோப்ரா – சிக்கி ரெட்டி இணையானது ஜப்பானின் கோந்தோ – குரிஹாரா இணையையும் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – பொன்னப்பா இணையானது மலேசியாவின் சன் பெங் சூன் – கோ லியூ யிங்கையும் எதிர்கொள்கின்றனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • இரண்டு ஓபன்களிலும் ஜப்பானின் யம்மாகூச்சியிடம் தான் தோல்வியடைந்தார் சிந்து
  • முதல் சுற்றில் சீனாவின் ஹான் யூவை எதிர்கொள்ள இருக்கிறார் சிந்து
  • இந்தோனேசியா, ஜப்பான் ஓபன்களில் பங்கேற்காமல் இருந்தார் இந்தியாவின் சாய்னா
தொடர்புடைய கட்டுரைகள்
Malaysia Masters: பி.வி.சிந்து, சாய்னா நேவால் காலிறுதியில் வெளியேறினர்
Malaysia Masters: பி.வி.சிந்து, சாய்னா நேவால் காலிறுதியில் வெளியேறினர்
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
BWF World Tour Finals: போட்டியில் தோற்று வெளியேறிய பி.வி.சிந்து!
BWF World Tour Finals: போட்டியில் தோற்று வெளியேறிய பி.வி.சிந்து!
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Advertisement