ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து தங்கம் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெறும் 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த அரையிறுதியில் சீனாவின் சென் யூவுடன் மோதிய சிந்து, ஆபாரமான ஆட்டத்தால் 40 நிமிடங்களில் சென்யூவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
ஏற்கனவே 2 முறை இறுதி போட்டியில் தோல்வியை தழுவி, வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியிருந்த சிந்து, இந்த முறை தங்கபதக்கம் வெள்ளவாரா என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதைதொடர்ந்து, இன்று நடைபெற இறுதி போட்டியில் பி.வி.சிந்துவும் ஜப்பானின் நோசோமி ஒகுஹரா மோதினர்.
இந்த ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹராவை 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 38 நிமிடங்களில் ஆட்டத்தை நிறைவு செய்த பி.வி.சிந்து, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கணையை எளிதாக வீழ்த்தி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து. அவருக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.