"இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்" - தங்கம் வென்று நாடு திரும்பிய சிந்து!

Updated: 27 August 2019 12:07 IST

இந்திய கேப்பிடலான டெல்லியில் வந்து இறங்கிய சிந்து, செய்தியாளர்களிடம் நீண்ட உரையாடலை மேற்கொண்டார். வெற்றிக்கு காரணமாக இருந்த தன்னுடைய பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பிவி சிந்து இன்று நள்ளிரவு டெல்லி இந்திரா காந்து சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். உலக சாம்பியன்ஷிப் வென்று வந்த அவரை பெரும் ரசிகர் கூட்டம் வரவேற்றது. இரண்டு முறை வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து ஞாயிற்றுக்கிழமை முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான காத்திருப்பை முடித்தார். இந்திய கேப்பிடலான டெல்லியில் வந்து இறங்கிய சிந்து, செய்தியாளர்களிடம் நீண்ட உரையாடலை மேற்கொண்டார். வெற்றிக்கு காரணமாக இருந்த தன்னுடைய பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். 24 வயதான இவர், இது வாழ்க்கையின் மிக முக்கியமாக நேரம், மேலும் நான் இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

"நான் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி. இன்னும் கடினமாக உழைத்து, பல பதக்கங்களை வெல்வேன். இரண்டு முறை தவரவிட்டதை இந்த முறை வென்றுவிட்டேன்," என்றார் பிவி சிந்து.

"இது எனக்கு மிக சிறந்த தருணம். நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்," என்றார்.

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெறும் 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த அரையிறுதியில் சீனாவின் சென் யூவுடன் மோதிய சிந்து, ஆபாரமான ஆட்டத்தால் 40 நிமிடங்களில் சென்யூவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். 

ஏற்கனவே 2 முறை இறுதி போட்டியில் தோல்வியை தழுவி, வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியிருந்த சிந்து, இந்த முறை தங்கபதக்கம் வெள்ளவாரா என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதைதொடர்ந்து, இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் பி.வி.சிந்துவும் ஜப்பானின் நோசோமி ஒகுஹரா மோதினர். 

இந்த ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹராவை 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 38 நிமிடங்களில் ஆட்டத்தை நிறைவு செய்த பி.வி.சிந்து, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கணையை எளிதாக வீழ்த்தி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

2016 ரியோ விளையாட்டுப் போட்டிகளில் ஒலிம்பிக் வெள்ளி, கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு வெள்ளி மற்றும் கடந்த ஆண்டு பிடபள்யூஎஃப் உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகளையும் சிந்து வென்றுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
டென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் நுழைந்தார் பி.வி.சிந்து!
டென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் நுழைந்தார் பி.வி.சிந்து!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
Korea Open: முதல் சுற்றில் பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெளியேறினர்!
Korea Open: முதல் சுற்றில் பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெளியேறினர்!
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
Advertisement