"இந்தியாவின் பெருமை" - பிவி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி!

Updated: 27 August 2019 16:02 IST

பிஎஃப்டபள்யூ உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பியுள்ள பிவி சிந்துவை சந்தித்து பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிஎஃப்டபள்யூ உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பியுள்ள பிவி சிந்துவை சந்தித்து பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார். "இந்தியாவின் பெருமை" என்ற பிரதமர் மோடி, சிந்துவின் எதிர்காலத்துக்கும் வாழ்த்து தெரிவித்தார். உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியன் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிவி சிந்து. ஞாயிற்றுக்கிழமை நடைபெற இறுதி போட்டியில் பி.வி.சிந்துவும் ஜப்பானின் நோசோமி ஒகுஹரா மோதினர். இந்த ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹராவை 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் ஐந்தாவது பதக்கம் பெற்றார். அவர் 2013 மற்றும் 2014 பதிப்புகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றார். 2017ம் ஆண்டு ஒகுஹராவிடம் இறுதிச் சுற்றில் தோற்றார். பின்னர், 2018ம் ஆண்டு காரோலினா மாரினிடம் தோற்று வெள்ளி பதக்கம் பெற்றார்.

மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிவி சிந்துவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, "இந்தியாவின் பெருமை, தங்கத்தையும், நிறைய பெருமைகளையும் வீட்டுக்கு கொண்டு வந்த ஒரு சாம்பியன்! சிந்துவை சந்தித்தில் மகிழ்ச்சி @Pvsindhu1. அவருக்கும் அவருடைய எதிர்காலத்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்."

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெறும் 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில்,  அரையிறுதியில் சீனாவின் சென்யூவுடன் மோதிய சிந்து, ஆபாரமான ஆட்டத்தால் 40 நிமிடங்களில் சென்யூவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். 

ஏற்கனவே 2 முறை இறுதி போட்டியில் தோல்வியை தழுவி, வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியிருந்த சிந்து, இந்த முறை தங்கபதக்கம் வெள்ளவாரா என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதைதொடர்ந்து, ஞாயிறன்று நடைபெற இறுதி போட்டியில் பி.வி.சிந்துவும் ஜப்பானின் நோசோமி ஒகுஹரா மோதினர். 

இந்த ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹராவை 21-7; 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 38 நிமிடங்களில் ஆட்டத்தை நிறைவு செய்த பி.வி.சிந்து, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கணையை எளிதாக வீழ்த்தி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து. அவருக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Malaysia Masters: பி.வி.சிந்து, சாய்னா நேவால் காலிறுதியில் வெளியேறினர்
Malaysia Masters: பி.வி.சிந்து, சாய்னா நேவால் காலிறுதியில் வெளியேறினர்
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
BWF World Tour Finals: போட்டியில் தோற்று வெளியேறிய பி.வி.சிந்து!
BWF World Tour Finals: போட்டியில் தோற்று வெளியேறிய பி.வி.சிந்து!
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Advertisement