மலேசியா ஓபன் பேட்மிண்டன் 2018: அரை இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து தோல்வி

Updated: 30 June 2018 16:45 IST

மலேசியா ஓபன் பேட்மிண்டன் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி சிந்து தோல்வியுற்றார்

Malaysia Open 2018, Badminton Highlights PV Sindhu vs Tai Tzu Ying: PV Sindhu Goes Down Fighting vs Tai Tzu Ying
© AFP

மலேசியா ஓபன் பேட்மிண்டன் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி சிந்து தோல்வியுற்றார். உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் தைவான் வீராங்கனை தை சுடு இங் உடன் மோதிய ஆட்டத்தில் 15-21, 21-19, 11-21 என்ற புள்ளி கணக்கில் பி.வி சிந்து தோல்வியுற்றார்.

போட்டியின் முதல் செட்டை, 15-21 என்ற புள்ளிகளில் தை சுடு இங் வென்றார். கடுமையான போட்டிக்கு இடையே சிறப்பாக விளையாடிய பி.வி சிந்து, போட்டியின் இரண்டாம் செட்டை கைப்பற்றினார். எனினும் அதிரடியாக விளையாடிய தைவான் வீரங்கனை மூன்றாவது செட்டை வென்று, இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இதற்கு முன்பு நடைப்பெற்ற காலிறுதி போட்டியில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்லினா மரினுடன் பி.வி சிந்து மோதினார். பரபரபான காலிறுதி ஆட்டத்தில் 22-20, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவின் பி.வி சிந்து வெற்றி பெற்றார். இறுதி போட்டிக்கு முன்னேறுவார் என்று எதிர்ப்பார்த்த போது, கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தை சுடு இங்கிடம் சிந்து தோல்வியுற்றார்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
"இந்தியாவின் பெருமை" - பிவி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி!
"இந்தியாவின் பெருமை" - பிவி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி!
"இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்" - தங்கம் வென்று நாடு திரும்பிய சிந்து!
"இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்" - தங்கம் வென்று நாடு திரும்பிய சிந்து!
"என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை" - வரலாற்று சாதனைக்கு பின் சிந்து!
"என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை" - வரலாற்று சாதனைக்கு பின் சிந்து!
"தொடர்ந்து கேள்வி கேட்டவர்களுக்கு இப்போது பதிலளித்துள்ளேன்" - பி.வி.சிந்து!
"தொடர்ந்து கேள்வி கேட்டவர்களுக்கு இப்போது பதிலளித்துள்ளேன்" - பி.வி.சிந்து!
Advertisement