Listen to the latest songs, only on JioSaavn.com
 

Korea Masters: 2வது சுற்றில் தோற்று நாக் அவுட் ஆனார் கிடாம்பி ஶ்ரீகாந்த்!

Updated: 21 November 2019 11:22 IST

கிடாம்பி ஸ்ரீகாந்த் கொரியா மாஸ்டர்ஸில் 14-21, 19-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் காந்தா சுனேயாமாவிடம் தோல்வியடைந்தார்.

Korea Masters: Kidambi Srikanth Knocked Out After Losing To Kanta Tsuneyama In Round 2
இரண்டாவது ஆட்டத்திலும் ஸ்ரீகாந்த் செயல்பட தவறிவிட்டார். © AFP

கிடாம்பி ஸ்ரீகாந்த் கொரியா மாஸ்டர்ஸில் 14-21, 19-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் காந்தா சுனேயாமாவிடம் தோல்வியடைந்தார். சுனேயாமா முதல் ஆட்டத்தை வசதியாக எடுத்துக் கொண்டார், ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக ஆறு புள்ளிகளை வென்றார். இந்திய ஷட்லரை விட முன்னேறினார். இரண்டாவது ஆட்டத்திலும் ஸ்ரீகாந்த் செயல்பட தவறிவிட்டார். சுனேயாமாவிடம் நான்கு புள்ளிகள் இடைவெளியைக் கொடுத்தார், அதிலிருந்து மீளத் தவறிவிட்டார். ஸ்ரீகாந்த் சுனேயாமாவை எதிர்கொண்டது இதுவே முதல் முறை.

ஆறாவது நிலை வீரரான ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் ஹாங்காங்கின் வோங் விங் கி வின்செண்டை 21-18, 21-17 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார், ஆனால் அவர் காலிறுதிக்கு முன்னேற முடியவில்லை.

வியாழக்கிழமை பின்னர் தென் கொரியாவின் கிம் டோங்ஹுனை எதிர்கொள்ளும் சமீர் வர்மா, போட்டிகளில் மீதமுள்ள ஒரே இந்தியர் ஆவார். டோங்கூன் முதல் சுற்றில் சமீரின் சகோதரர் சவுரப்பை தோற்கடித்தார்.

குவாங்ஜூவில் நடந்த போட்டிகளில் சாய்னா நேவால் விலகியிருந்தார். அதாவது பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியர் யாரும் பங்கேற்கவில்லை.

Comments
ஹைலைட்ஸ்
  • கிடாம்பி ஶ்ரீகாந்த் 14-21, 19-21 என்ற செட் கணக்கில் தோற்றார்
  • முதல் ஆட்டத்தில் காந்தா சுனேயாமா ஆறு நேர் புள்ளிகளை வென்றார்
  • போட்டிகளில் எஞ்சியிருக்கும் ஒரே இந்தியர் சமீர் வர்மா மட்டுமே
தொடர்புடைய கட்டுரைகள்
Barcelona Spain Masters: கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் 2வது சுற்றுக்கு முன்னேறினர்!
Barcelona Spain Masters: கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் 2வது சுற்றுக்கு முன்னேறினர்!
Syed Modi International: கிடாம்பி ஸ்ரீகாந்த் 2வது சுற்றுக்குள் நுழைந்தார்
Syed Modi International: கிடாம்பி ஸ்ரீகாந்த் 2வது சுற்றுக்குள் நுழைந்தார்
Korea Masters: 2வது சுற்றில் தோற்று நாக் அவுட் ஆனார் கிடாம்பி ஶ்ரீகாந்த்!
Korea Masters: 2வது சுற்றில் தோற்று நாக் அவுட் ஆனார் கிடாம்பி ஶ்ரீகாந்த்!
Korea Masters: கிடாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா முதல் சுற்றில் வெற்றி!
Korea Masters: கிடாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா முதல் சுற்றில் வெற்றி!
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்குள் நுழைந்தார்!
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்குள் நுழைந்தார்!
Advertisement