இந்தோனேசியா ஓபனில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றுக்கு தகுதி

Updated: 17 July 2019 15:21 IST

கெந்தாவை வீழ்த்த ஸ்ரீகாந்திற்கு 38 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

PV Sindhu, Kidambi Srikanth Enter 2nd Round Of Indonesia Open
பிவி சிந்து போராடி வெற்றி பெற்றார் © AFP

தற்போது இந்தோனேசியா பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் முதல் சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

$12,50,000 மதிப்பிலான இந்தோனேசியா ஓபன் பிடபிள்யூஎப் உலக டூர் சூப்பர் 1000 தொடரின் முதல் சுற்றில் சிந்து 11-21, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அயா ஒஹோரியை வீழ்த்தினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் கெந்தா நிஷிமோடோவை வீழ்த்தினார். கெந்தாவை வீழ்த்த ஸ்ரீகாந்திற்கு 38 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் செட்டி இணையானது 21-19, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் கோ ஷே பீ, நூர் இஷுயூதின் இணையை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா இணையான பிரனாவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் என். சிக்கி ரெட்டி 25-23, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் தப்லிங் மற்றும் செலினா பியக் இணையை வென்றது.

காமன்வெல்த் தொடரின் வெண்கல பதக்கம் வென்ற பெண்கள் இரட்டையர் இணையான அஷ்வினி பொன்னப்பா மற்றும் என். சிக்கி ரெட்டி 20-22, 22-20, 20-22 என்ற செட் கணக்கில் மலேசியாவின் விவியன் ஹூ மற்றும் யாப் செங் வென் இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.  

Comments
ஹைலைட்ஸ்
  • கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-14, 21-13 செட் கணக்கில் நிஷிமோடோவை வீழ்த்தினார்
  • சிந்து 11-21, 21-15, 21-15 என்ற செட் கணக்கில ஒஹோரியை வென்றார்
  • ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரிலும் வெற்றி பெற்றது இந்தியா இணை
தொடர்புடைய கட்டுரைகள்
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
China Open: முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் பி.வி.சிந்து!
China Open: முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் பி.வி.சிந்து!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
Advertisement