இந்தோனேசியா ஓபன் 2019: சிந்து வெற்றி, ஸ்ரீகாந்த் தோல்வி...!

Updated: 19 July 2019 12:40 IST

இந்தியா சார்பாக பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் உட்பட பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

Indonesia Open 2019: PV Sindhu Enters Quarter-Finals; Kidambi Srikanth Knocked Out
காலிறுதிக்கு தகுதி பெற்றார் பிவி சிந்து © AFP

$12,50,000 மதிப்பிலான இந்தோனேசியா ஓபன் பிடபிள்யூஎப் உலக டூர் சூப்பர் 1000 தொடர் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் உட்பட பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

பெண்கள் பிரிவில் இரண்டாம் சுற்றில் பிவி சிந்து 21-14, 17-21, 21-11 என செட் கணக்கில் டென்மார்க்கின் மியா பிளிஷ்ஃபெல்த்தை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

ஆண்கள் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கையாக இருந்த கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். இரண்டாம் சுற்றில் 17-21, 19-21 என நேர் செட் கணக்கில் அங்கஸ் இங் கா லாங்யிடம் தோல்வி கண்டு வெளியேறினார் ஸ்ரீகாந்த்.

ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியாவின் இரட்டையர் பிரிவில் த்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் செட்டி இணையானது 15-21, 14-21 என நேர் செட் கணக்கில் இந்தோனேசியாவின் இணையான மார்கஸ் பெர்னால்டி மற்றும் கெவின் சஞ்சயா சுகமில்ஜோ இணையிடம் தோல்வி அடைந்தனர். இந்த போட்டி 30 நிமிடங்களுக்கு கீழ் தான் நடந்தது.

ஏற்கனவே முதல் சுற்றில் காமன்வெல்த் தொடரின் வெண்கல பதக்கம் வென்ற பெண்கள் இரட்டையர் இணையான அஷ்வினி பொன்னப்பா மற்றும் என். சிக்கி ரெட்டி தோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • பிவி சிந்து 21-14, 17-21, 21-11 என மியா பிளிஷ்ஃபெல்த்தை வென்றார்
  • கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
  • ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியா இணை தோல்வியடைந்தது
தொடர்புடைய கட்டுரைகள்
தாய்லாந்து ஓப்பனிலிருந்து வெளியேறிய பிவி சிந்து!
தாய்லாந்து ஓப்பனிலிருந்து வெளியேறிய பிவி சிந்து!
தாய்லாந்த் ஓபனில் சாதிப்பார்களா இந்தியா வீரர்கள்?
தாய்லாந்த் ஓபனில் சாதிப்பார்களா இந்தியா வீரர்கள்?
ஜப்பான் ஒப்பன் காலிறுதியில் பிவி சிந்து, சாய் பிரணித்!
ஜப்பான் ஒப்பன் காலிறுதியில் பிவி சிந்து, சாய் பிரணித்!
இந்தோனேசியா ஓபன் 2019: சிந்து வெற்றி, ஸ்ரீகாந்த் தோல்வி...!
இந்தோனேசியா ஓபன் 2019: சிந்து வெற்றி, ஸ்ரீகாந்த் தோல்வி...!
இந்தோனேசியா ஓபனில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றுக்கு தகுதி
இந்தோனேசியா ஓபனில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றுக்கு தகுதி
Advertisement