தாயின் பிறந்தநாளன்று தங்கம் வென்று அவரை பெருமைபடுத்திய பி.வி.சிந்து...!

Updated: 26 August 2019 11:59 IST

சிந்து முதல் ஆட்டத்தை 21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது ஆட்டத்தையும் 21-7 என்ற கணக்கில் வென்றார்.

PV Sindhu Dedicates World Championships Win To Mother On Birthday
ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளார் பி.வி.சிந்து. © AFP

பி.வி.சிந்து பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளார். சிந்து முதல் ஆட்டத்தை 21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது ஆட்டத்தையும் 21-7 என்ற கணக்கில் வென்றார். சிந்து கடைசி போட்டியை 36 நிமிடங்களில் முடித்தார். போட்டியின் நடுவில் சிந்து, 7 புள்ளிகள் முன்னிலை பெற்று, கடைசியில் ஒகுஹராவை வீழ்த்தி வெற்றி பெற்றார். போட்டி முடிந்த பிறகு பேசிய சிந்து, இந்த வெற்றியை தன் தாய் பி விஜயாவுக்கு அர்பணித்தார். நேற்று அவரின் பிறந்தநாளுக்கு அவர் இந்த வெற்றியை அவருக்கு பரிசாக அளித்தார். "நான் இந்த வெற்றியை என் அம்மாவுக்கு சமர்பிக்கிறேன். இன்று அவருடைய பிறந்தநாள். நன்றி அம்மா," என்று சிந்து கூறினார்.

உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்காக வென்றது பெருமையாக இருப்பதாக சிந்து தெரிவித்தார்.

"நான் என் நாட்டுக்காக வென்றிருக்கிறேன், இந்தியனாக இருப்பத்தில் நான் பெருமை கொள்கிறேன்," என்றார் சிந்து.

இந்த வெற்றிக்கு முன்பு, சிந்து இந்த வருடத்தில் எந்த போட்டியிலும் சிறப்பாக ஆடவில்லை. இந்த வெற்றியின் முக்கியத்துவம் அறிந்து விளையாடி வென்ற சிந்து, "கடந்த முறை நான் இறுதிச் சுற்றில் தோற்றேன். அதற்கு முன்பும் இறுதியில் தோற்றேன். இது எனக்கு மிகவும் முக்கியமான வெற்றியாகும். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்" என்றார்.

"என்னுடைய பயிற்சியாளர் மிஸ் கிம் (தென்கொரியன் கிம் ஜி ஹ்யூன்) மற்றும் கோபி சார் (புல்லெல்லா கோபிசந்த்) மற்றும் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைக்குவருக்கும் மற்றும் என் பெற்றோருக்கும் மிக பெரிய நன்றியை தெரிவித்துகொள்கிறேன்" என்று தன்னுடைய நன்றியை தெரிவித்தார்.

போட்டி முழுவதும் தனக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் அனைவருக்கும் பி வி சிந்து நன்றி தெரிவித்தார்.

"இங்கு கூறியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றி. இது எனக்கு மிகவும் முக்கியமானது. நான் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும்போது, அவர்கள் என்னுடன் இருந்து என்னை உற்சாகப்படுத்தினர்," ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி கூறினார் சிந்து.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
China Open: முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் பி.வி.சிந்து!
China Open: முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் பி.வி.சிந்து!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
Advertisement