பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!

Updated: 23 October 2019 19:23 IST

இந்திய பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து செவ்வாயன்று நடைபெற்ற சுற்றில் கனடாவின் மைக்கேல் லியை நேரான ஆட்டங்களில் வீழ்த்திய பின்னர் பிரெஞ்சு ஓபன் இரண்டாவது சுற்றில் நுழைந்தார்.

French Open: PV Sindhu, Subhankar Dey Enter Second Round
44 நிமிட ஆட்டத்தில் சிந்து தனது எதிரியை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். © AFP

இந்திய பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து செவ்வாயன்று நடைபெற்ற சுற்றில் கனடாவின் மைக்கேல் லியை நேரான ஆட்டங்களில் வீழ்த்திய பின்னர் பிரெஞ்சு ஓபன் இரண்டாவது சுற்றில் நுழைந்தார். 44 நிமிட ஆட்டத்தில் சிந்து தனது எதிரியை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இந்தியன் முதல் ஆட்டத்தை வெறும் 20 நிமிடங்களில் எளிதாக முடித்து, அடுத்த ஆட்டத்திலும் கனேடியனை மீது ஆதிக்கம் செலுத்தினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிடபள்யூஎஃப் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற சிந்து, சமீபத்தில் சீனா ஓபன், கொரியா ஓபன் மற்றும் டென்மார்க் ஓபன் ஆகிய மூன்று போட்டிகளில் இரண்டாவது சுற்றைக் கடக்கத் தவறியதால், அவர் ஃபார்முக்கு வெளியே இருக்கிறார்.

நாளின் தொடக்கத்தில், ஆண்கள் ஒற்றையர் போட்டியில் ஷட்லர் சுபங்கர் டேயும் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் ஆட்டத்தில் 15-21 என்ற தோல்வியை எதிர்கொண்ட இந்தோனேசியாவின் டாமி சுகியார்டோவுக்கு எதிராக டே மீண்டும் நுழைந்தார். இரண்டாவது ஆட்டத்தை 21-14 என்ற கணக்கில் வென்றார்.

சாய்னா நேவால் மற்றும் பருப்பள்ளி காஷ்யப் ஆகியோர் புதன்கிழமை போட்டியின் முதல் சுற்று போட்டிகளில் விளையாடுவார்கள்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Malaysia Masters: பி.வி.சிந்து, சாய்னா நேவால் காலிறுதியில் வெளியேறினர்
Malaysia Masters: பி.வி.சிந்து, சாய்னா நேவால் காலிறுதியில் வெளியேறினர்
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
BWF World Tour Finals: போட்டியில் தோற்று வெளியேறிய பி.வி.சிந்து!
BWF World Tour Finals: போட்டியில் தோற்று வெளியேறிய பி.வி.சிந்து!
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Advertisement