சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!

Updated: 17 October 2019 11:58 IST

ஏற்கனவே பிவி சிந்து, சாய் பிரனீத் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தனர்

Denmark Open: Kidambi Srikanth, Saina Nehwal Knocked Out After Losing In First Round
டென்மார்க் ஓபன் முதல் சுற்றில் சாய்னா தோல்வியடைந்தார் © AFP

நடைபெற்று கொண்டிருக்கும் டென்மார்க் ஓபன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என நேர் செட் கணக்கில் ஆண்டர்ஸ் ஆண்டேன்செனிடம் தோல்வி அடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா 21-11, 21-11 என நேர் செட் கணக்கில் ஜப்பானின் கண்டாவை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் 15-21, 23-21 என நேர் செட் கணக்கில் ஜப்பானின் சயாகா தகஹாசியிடம் தோல்வியடைந்தார். இந்த போட்டி 37 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. ஏற்கனவே சீனா ஓபன், கொரியா ஓபன்களின் முதல் சுற்றில் சாய்னா நேவால் தோல்வி அடைந்திருந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் சத்விக்சாய்ராஜ் ரங்கி – அஷ்வினி பொன்னாப்பா இணை முதல் சுற்றிலிருந்து விலகியது. மற்றொரு ஆட்டத்தில் பிரணாவ் ஜெர்ரி சோப்ரா – சிக்கி ரெட்டி இணையானது 21-16, 21-11 என நேர் செட் கணக்கில் ஜெர்மனி இணையான மார்வின் செய்டல் – லிந்தா எப்லர் இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஏற்கனவே பிவி சிந்து, சாய் பிரனீத் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தனர். அதே நேரம் காஷ்யாப், சவுரப் வெர்மா ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர்.

  

Comments
ஹைலைட்ஸ்
  • ஸ்ரீகாந்த் 14-21, 18-21 என நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்
  • சமீர் வர்மா 21-11, 21-11 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்
  • பிரணாவ் ஜெர்ரி சோப்ரா – சிக்கி ரெட்டி இணை வெற்றி பெற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
நடுவரின் தவறான முடிவை விமர்சித்த சாய்னா நேவால்!
நடுவரின் தவறான முடிவை விமர்சித்த சாய்னா நேவால்!
Advertisement