டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!

Updated: 08 October 2019 15:56 IST

சாய்னா நேவால் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை குறிப்பிட்டு, இன்னும் அவருக்கு விசா கிடைக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Denmark Open: On Twitter, Saina Nehwal’s SOS To Foreign Minister S Jaishankar For Visa
டென்மார்க் ஓபன் வரும் அக்டோபர் மாதம் 15 முதல் 20ம் தேதி வரை நடக்கவுள்ளது. © AFP

டென்மார்க் ஓபனுக்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், அவருக்கும் அவரது பயிற்சியாளருக்கும் விசாவையும் செயலாக்குவதற்கு உதவி கோரி பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் முறையிட்டார். சாய்னா நேவால் தன் ட்விட்டர் பக்கத்தில் ஜெய்சங்கரை குறிப்பிட்டு, இன்னும் அவருக்கு விசா கிடைக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார். டென்மார்க் ஓபன் வரும் அக்டோபர் மாதம் 15 முதல் 20ம் தேதி வரை நடக்கவுள்ளது. "எனக்கும் எனது பயிற்சியாளருக்கும் டென்மார்க்கு விசா தொடர்பாக அவசர கோரிக்கை உள்ளது. ஒரு வாரத்தில் போட்டிகள் தொடங்கயிருக்கும் நேரத்தில், இன்னும் விசா கிடைக்கவில்லை. எங்களுடைய போட்டி, அடுத்த வாரம் செவ்வாய்கிழமை தொடங்கவுள்ளது," என்று சாய்னா நேவால் ட்விட் செய்துள்ளார்.

உலகின் 8வது இடத்தைப் பிடித்த சைனா நேவால், கடந்த ஆண்டு டென்மார்க் ஓபனில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இறுதிப் போட்டியில் சீன தைபேயின் தை சூ யிங்கிடம் தோற்றார்.

டென்மார்க் ஓபனின் முதல் சுற்றில் ஜப்பானின் சாயகா தகாஹாஷியை எதிர்கொள்ள உள்ளார்.

சாய்னாவின் தோழியான பி.வி சிந்துவும் போட்டிகளில் அதிரடியாகக் காணப்படுவார்.

இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்கள் அவர்கள் விளையாடிய கடைசி போட்டியில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த சிரமப்பட்டனர்.

கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நட்சத்திர வீரர்களான சிந்து, சாய்னா நேவால் மற்றும் பி சாய் பிரனீத் ஆகியோர் முதல் சுற்றி வெளியேறினர்.

அமெரிக்காவின் பீவன் ஜாங்கிடம்  7-21, 24-22, 15-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்த சிந்து போட்டிகளில் இருந்து விலகியிருந்தார் - சாய் பிரனீத் மற்றும் சாய்னா இருவரும் அந்தந்த முதல் சுற்று போட்டிகளில் ஓய்வு பெற்றனர்.

லண்டன் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, தென் கொரியாவின் கிம் கா யூனுக்கு எதிராக 21-19, 18-21 மற்றும் 1-8 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தார்.

சாய்னாவின் கணவரும், தனிப்பட்ட பயிற்சியாளருமான பருப்பள்ளி காஷ்யப், இரைப்பை பிரச்னை காரணமாக அவர் ஓய்வு பெற்றதாகக் கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
நடுவரின் தவறான முடிவை விமர்சித்த சாய்னா நேவால்!
நடுவரின் தவறான முடிவை விமர்சித்த சாய்னா நேவால்!
Advertisement