"என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை" - வரலாற்று சாதனைக்கு பின் சிந்து!

Updated: 26 August 2019 23:11 IST

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டுமென்ற பிவி சிந்துவின் கனவு நேற்று ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்திய பிறகு நிஜமாகியுள்ளது.

PV Sindhu Posts Heartfelt Message After Historic World Championships Win
பிவி சிந்துவின் கனவு நேற்று ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்திய பிறகு நிஜமாகியுள்ளது. © AFP

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டுமென்ற பிவி சிந்துவின் கனவு நேற்று ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்திய பிறகு நிஜமாகியுள்ளது. தங்கம் வென்ற சாம்பியனான சிந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெற்றியின் போது கடந்து வந்த நிலை குறித்து ஒரு மனமுருகும் செய்தியை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், இந்திய கொடி ஏற்றப்பட்ட போதும், தேசிய கீதம் ஒலித்தபோதும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் போனதாக கூறியிருந்தார்.

"இந்திய கொடி பறக்கவிட்ட போதும், தேசிய கீதம் ஒலிப்பதை கேட்ட போதும் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை," என்று அந்தப் பதிவில் சிந்து கூறியிருந்தார்.

பி.வி.சிந்து பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துள்ளார். சிந்து முதல் ஆட்டத்தை 21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது ஆட்டத்தையும் 21-7 என்ற கணக்கில் வென்றார். சிந்து கடைசி போட்டியை 36 நிமிடங்களில் முடித்தார். போட்டியின் நடுவில் சிந்து, 7 புள்ளிகள் முன்னிலை பெற்று, கடைசியில் ஒகுஹராவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

2016 ரியோ விளையாட்டுப் போட்டிகளில் ஒலிம்பிக் வெள்ளி, கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு வெள்ளி மற்றும் கடந்த ஆண்டு பிடபள்யூஎஃப் உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகளையும் சிந்து வென்றுள்ளார்.

"நேற்று உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதற்காக பல நாள் என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். என்னுடைய காத்திருப்பு இப்போது முடிந்துள்ளது. என்னுடைய பெற்றோர், பயிற்சியாளர்கள் (கோபி சார் மற்றும் மிஸ் கிம்) மற்றும் என்னுடைய பயிற்சியாளர் மிஸ்டர் ஶ்ரீகாந்த் வெர்மா மற்றும் மிக முக்கியமாக என்னுடைய ஸ்பான்ஸர்கள் மற்றும் ரசிகர்கள் இவர்கள் இல்லையென்றால் இது சாத்தியம் இல்லை. கடைசியாக உலக சாம்பியன் 2019," என்று சிந்து தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய சிந்து, இந்த வெற்றியை தன் தாய் பி விஜயாவுக்கு அர்பணித்தார். நேற்று அவரின் பிறந்தநாளுக்கு அவர் இந்த வெற்றியை அவருக்கு பரிசாக அளித்தார். "நான் இந்த வெற்றியை என் அம்மாவுக்கு சமர்பிக்கிறேன். இன்று அவருடைய பிறந்தநாள். நன்றி அம்மா," என்று சிந்து கூறினார்.

உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்காக வென்றது பெருமையாக இருப்பதாக சிந்து தெரிவித்தார்.

"நான் என் நாட்டுக்காக வென்றிருக்கிறேன், இந்தியனாக இருப்பத்தில் நான் பெருமை கொள்கிறேன்," என்றார் சிந்து.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
டென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் நுழைந்தார் பி.வி.சிந்து!
டென்மார்க் ஓபன்: இரண்டாவது சுற்றில் நுழைந்தார் பி.வி.சிந்து!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
Korea Open: முதல் சுற்றில் பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெளியேறினர்!
Korea Open: முதல் சுற்றில் பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெளியேறினர்!
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
வெற்றிக்கு பின் திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பி.வி.சிந்து!
Advertisement