China Open: முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் பி.வி.சிந்து!

Updated: 05 November 2019 13:19 IST

பி.வி.சிந்து செப்டம்பர் மாதம் இரண்டாவது சுற்றில் சீனா ஓபன் சூப்பர் 1,000 லிருந்து வெளியேறினார்.

China Open: PV Sindhu Knocked Out After Losing To Pai Yu Po In Round Of 32
பி.வி சிந்து முதல் சுற்றில் தோற்று சீனா ஓபனில் இருந்து வெளியேறினார். © AFP

பி.வி.சிந்து, செவ்வாயன்று 32வது சுற்றில் சீன தைபேயின் பை யூ போவிடம் தோல்வியடைந்து சீனா ஓபனில் நாக் அவுட் ஆனார். பி.வி.சிந்து முதல் ஆட்டத்தை 13-21 என்ற கணக்கில் இழந்தார், ஆனால் இரண்டாவது ஆட்டத்தில், சிந்து வலுவாக திரும்பி இரண்டாவது ஆட்டத்தை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றினார். இறுதி ஆட்டத்தில், இந்திய ஷட்லர் இடைவேளையில் பின்தங்கியிருந்தார். ஆனால் முன்னிலை பெற மீண்டும் போராடினார். ஆனால் அவரது சீன தைபே எதிர்ப்பாளர் 21-19 என்ற கணக்கில் வென்றார், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தனது உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கத்திற்குப் பிறகு, சிந்து நேராக ஐந்து போட்டிகளில் (சீனா ஓபன் உட்பட) இறுதிப் போட்டிக்கு வரத் தவறிவிட்டார். பி.வி.சிந்து செப்டம்பர் மாதம் இரண்டாவது சுற்றில் சீனா ஓபன் சூப்பர் 1,000 லிருந்து வெளியேறினார். அதே நேரத்தில் முதல் சுற்றில் கொரியா ஓபனில் இருந்து வெளியேற்றப்பட்டார். டென்மார்க் ஓபனில், சிந்து இரண்டாவது சுற்றை மட்டுமே அடைய முடிந்தது. வரலாற்று வெற்றிக்கு பிறகு பிரெஞ்சு ஓபனின் காலிறுதிக்கு வந்ததே அவரது சிறந்த செயல்திறன் என்று பார்க்கப்பட்டது.

முன்னதாக, இந்தியாவின் எச்.எஸ்.பிரனோய் தனது முதல் சுற்று ஆட்டத்தை டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவிடம் நேரான ஆட்டங்களில் இழந்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவில், அஸ்வினி பொன்னப்பா மற்றும் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் 21-19, 21-19 என்ற கணக்கில் ஜோசுவா ஹர்ல்பர்ட்-யூ மற்றும் ஜோசபின் வூவை வீழ்த்தினர்.

அமெரிக்காவின் பிலிப் செவ் மற்றும் ரியான் செவ் ஆகியோரை எதிர்கொள்வதால், பிற்பகுதியில், சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோரும் செயல்படுவார்கள்.

Comments
ஹைலைட்ஸ்
  • சீனா ஓபன் சூப்பர் 750 இன் முதல் சுற்றில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார்
  • பை யூ போ 21-13, 18-21, 21-19 என்று சிந்துவை தோற்கடித்தார்
  • ராஸ்மஸ் ஜெம்கேவிடம் தோல்வியடைந்த பின்னர் எச்.எஸ்.பிரனோய் வெளியேறினார்
தொடர்புடைய கட்டுரைகள்
Malaysia Masters: பி.வி.சிந்து, சாய்னா நேவால் காலிறுதியில் வெளியேறினர்
Malaysia Masters: பி.வி.சிந்து, சாய்னா நேவால் காலிறுதியில் வெளியேறினர்
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
இந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்!
BWF World Tour Finals: போட்டியில் தோற்று வெளியேறிய பி.வி.சிந்து!
BWF World Tour Finals: போட்டியில் தோற்று வெளியேறிய பி.வி.சிந்து!
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
2019 BWF World Tour Finals: தகுதி பெற்ற ஒரே இந்தியர் பி.வி.சிந்து
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Hong Kong Open: கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற, பி.வி சிந்து வெளியேறினார்
Advertisement