ரோஹித் - விஹாரி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் யாருக்கு இடம்?
பிற மொழிக்கு | READ IN

Updated: 05 December 2018 16:43 IST

இந்திய கேப்டன் விராட் கோலி பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதலாவது டெஸ்ட்டுக்கான 12 பேர் கொண்ட அணியின் விவரத்தை வெளியிட்டுள்ளார்.

India vs Australia: Virat Kohli, Tim Paine Announce Their Teams For Adelaide Test
இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை தொடரை வென்றதில்லை. © Twitter

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் துவங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய கேப்டன் விராட் கோலி பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதலாவது டெஸ்ட்டுக்கான 12 பேர் கொண்ட அணியின் விவரத்தை வெளியிட்டுள்ளார். ஹனுமா விஹாரி அல்லது ரோஹித் ஷர்மா இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வருட ஆரம்பத்தில் ஓவலில் நடைபெற்ற டெஸ்ட்டில் அறிமுகமான ஹனுமா விஹாரி முதல் இன்னிங்ஸில் அரைசதம் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரோஹித் ஷர்மா 2014-15லிருந்து 6 இன்னிங்ஸில் ஆடி  அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை தொடரை வென்றதில்லை. ஆனால் உலகின் நம்பர் 1 அணியாக இருக்கும் இந்தியாவுக்கு இந்த முறை வார்னர், ஸ்மித் இல்லாதது பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியிலிருந்து மோசமான ஃபார்ம் காரணமாக‌ மிட்செல் மார்ஷ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் தனது சகோதரர் கைது என்ற விஷயத்திலிருந்து மீண்டு, உஸ்மான் கவாஜா அணிக்கு திரும்புகிறார் என்ற செய்தியை உறுதி செய்துள்ளார் ஆஸ் கேப்டன் டிம் பெய்ன்.

அறிமுக வீரர் மார்கஸ் ஹாரிஸ் துவக்க வீரராக களமிறங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அணியை பொறுத்தமட்டில் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

அணி விவரம்:

முரளி விஜய், கே.எல்.ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரோஹித் ஷர்மா/விஹாரி, ரஹானே, ரிஷப் பன்ட், அஷ்வின், ஷமி, இஷாந்த், பும்ராஹ்

ஆஸ்திரேலியா:

மார்கஸ் ஹாரிஸ், பின்ச், கவாஜா, ஷான் மார்ஷ், ட்ராவிஸ் ஹெட், ஹாண்ட்ஸ்கோம்ப், டிம் பெய்ன்(கேப்டன்), ஹேசல்வுட், கம்மின்ஸ், நாதன் லயன், ஸ்டார்க்.

(With AFP inputs)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸிடம் ஸ்லெட்ஜ் செய்த ரிஷப் பன்ட்!
ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸிடம் ஸ்லெட்ஜ் செய்த ரிஷப் பன்ட்!
அடிலெய்ட் டெஸ்ட்: 10 வருடத்துக்கு பிறகு ஆஸி மண்ணில் இந்தியா அபார வெற்றி!
அடிலெய்ட் டெஸ்ட்: 10 வருடத்துக்கு பிறகு ஆஸி மண்ணில் இந்தியா அபார வெற்றி!
சச்சின், டிராவிட் சாதனையை முறியடித்த விராட் கோலி!
சச்சின், டிராவிட் சாதனையை முறியடித்த விராட் கோலி!
அடிலெய்ட் டெஸ்ட்: ஸ்லிப்பில் நின்று டான்ஸ் ஆடிய விராட் கோலி!
அடிலெய்ட் டெஸ்ட்: ஸ்லிப்பில் நின்று டான்ஸ் ஆடிய விராட் கோலி!
அடிலெய்டில் வைரலான விராட் கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டம்!
அடிலெய்டில் வைரலான விராட் கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டம்!
Advertisement