''மோனாலிசா ஓவியம் போன்றது விராட் கோலியின் ஆட்டம்'' முன்னாள் ஆஸி வீரர் டியன் ஜோன்ஸ்

Updated: 02 December 2018 06:25 IST

டிசம்பர் 6ம் தேதி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆடவுள்ளது.

India vs Australia: Virat Kohli Is Flawless Like The Mona Lisa, Says Dean Jones
இங்கிலாந்து சென்றிருந்த இந்திய அணியில் 10 இன்னிங்ஸ்களில் 593 ரன்கள் விளாசினார் இந்திய கேப்டன் கோலி. © AFP

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து சென்றிருந்த இந்திய அணியில் 10 இன்னிங்ஸ்களில் 593 ரன்கள் விளாசினார் இந்திய கேப்டன் கோலி. இதில் இரண்டு சதங்களும் அடங்கும். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி தொடரிலும் கோலி சதமடித்தார். 

கோலியை பாராட்டிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டியன் ஜோன்ஸ் ''கோலியின் ஆட்டத்தின் தவறு கண்டுபிடிப்பது என்பது மோனாலிஸா ஓவியத்தில் தவறு கண்டுபிடிப்பதற்கு சமமானது. மற்ற அணிகள் முதலில் அவரை கவர் ட்ரைவ் ஆடாமல் இருக்க என்ன செய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

2014-15ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சார்பில் அதிக ரன் குவித்தது கோலி தான். 4 டெஸ்ட்களில் 692 ரன்கள் குவித்தார். இதில் 4 சதங்களும், ஒரு அரைசதமும் அடங்கும். 

அழுத்தமான சூழலில் சிறப்பாக ஆடும் திறன் கொண்டவர் கோலி என்றும் ஜோன்ஸ் பாராட்டினார். 

1947 முதல் 11 முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை ஒருதொடரையும் வென்றதில்லை. 2014-15 ல் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித் இல்லை இது தான் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல சரியான தருணம். இப்போதும் இந்தியா வெல்லவில்லை என்றால் இனி எப்போதும் வெல்லாது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் ட்ரா செய்த இந்திய அணி. டிசம்பர் 6ம் தேதி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆடவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
Advertisement