அடிலெய்ட் டெஸ்ட்: ஸ்லிப்பில் நின்று டான்ஸ் ஆடிய விராட் கோலி!

Updated: 08 December 2018 11:30 IST

ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலி, மைதானத்தில் வந்த இசைக்கு ஏற்றது  போல் நடனமாடி அசத்தினார்.

India vs Australia: Virat Kohli Breaks Into An Impromptu Dance In Soggy Adelaide - Watch
இந்திய அணி தரப்பில் அஷ்வின், பும்ராஹ் தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த், ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். © AFP

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டம் மழை குறுக்கீட்டோடு தொடர்ந்தது. ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்து வந்தன. ஆனால் இந்திய கேப்டன் கோலியின் டான்ஸ் அனைவரையும் ஈர்த்தது. ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கோலி, மைதானத்தில் வந்த இசைக்கு ஏற்றது  போல் நடனமாடி அசத்தினார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் ''விராட் இதை நேசிக்கிறார்'' என்று பதிவிட்டிருந்தது. 

முன்னதாக இரண்டாம் நாள் ஆட்டநேர இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்திருந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கியது. ஆட்டம் துவங்கியதிலிருந்தே ஆஸ்திரேலிய அணியினர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  

நேற்றைய ஸ்கோருடன் 13 ரன்கள் சேர்த்த நிலையில் 8வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பும்ராஹ் பந்தில் ஆட்டமிழந்தார். அதோடு மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தடைபட்டது. 

மழைக்கு பின் துவங்கிய போட்டியில் நன்றாக ஆடி வந்த ட்ராவிஸ் ஹெட் 72 ரன்கள் எடுத்து அவுட் ஆன அடுத்த பந்தில் ஹேசல்வுட் அவுட் ஆக ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி தரப்பில் அஷ்வின், பும்ராஹ் தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த், ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி ஆடி வருகிறது இந்தியா.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
2வது டி20 போட்டி: ஒற்றை கை கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி!
Advertisement