"வலை பயிற்சி வேண்டாம் ஓய்வெடுங்கள்" வீரர்களுக்கு ரவி சாஸ்த்ரி அறிவுரை

Updated: 10 December 2018 19:41 IST

"இங்கிலாந்துக்கு எதிராக 31 ரன்னில் முதல் டெஸ்ட்டையும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 60-70 ரன்னிலும் தோற்றோம் அதிலிருந்து மீண்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் ரவி சாஸ்த்ரி.

India vs Australia: To Hell With The Nets, Boys Need Rest, Says Ravi Shastri
இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி இந்திய வீரர்களை வலைபயிற்சியை விட்டுவிட்டு கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று கூறியுள்ளார்.  © AFP

இந்தியா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட்டை வென்றது. பெர்த்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட்டுக்கு முன்னால் ஆஸ்திரேலிய அணி தோல்வியிலிருந்து மீண்டு வரும் என்று கூறப்படும் நிலையில், இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி இந்திய வீரர்களை வலைபயிற்சியை விட்டுவிட்டு கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் பெர்த் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக பந்துவீசினாலே அவர்களால் சிறப்பாக வீச முடியும். அதனால் நீங்கள் சற்று ஓய்வெடுங்கள் என்று கூறியதாக கூறினார். 

"இங்கிலாந்துக்கு எதிராக 31 ரன்னில் முதல் டெஸ்ட்டையும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 60-70 ரன்னிலும் தோற்றோம் அதிலிருந்து மீண்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் ரவி சாஸ்த்ரி.

இது ஒட்டுமொத்த அணியின் செயல்பாடுக்கு கிடைத்த வெற்றி, 4 பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு 15 ரன்கள் முன்னிலை பெறுவது என்பது அதிசயமான ஒன்று. மேலும் இந்த டெஸ்ட்டை வென்றிருக்கிறோம் என்றார். 

"முதல் இன்னிங்ஸில் இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பினர் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. புஜாராவின் இரண்டு இன்னிங்ஸ் ஆட்டமும் பிரமிக்க வைத்தது. ரிஷப் பன்ட் உலக சாதனை படைத்தது சிறப்பான விஷயமாகும். அவரை அவரது ஆட்டத்தை ஆடவே அனுமதி அளித்துள்ளோம். தற்போது மேலும் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்" என்று பாராட்டினார் ரவி சாஸ்த்ரி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ரவி சாஸ்திரி விண்ணப்பித்தால்,அவருக்கே முன்னுரிமை" - பிசிசிஐ அதிகாரி
"ரவி சாஸ்திரி விண்ணப்பித்தால்,அவருக்கே முன்னுரிமை" - பிசிசிஐ அதிகாரி
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபிக்க தேவையான தகுதிகள்!
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபிக்க தேவையான தகுதிகள்!
இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு - ரவி சாஸ்திரி உள்ளிட்ட நால்வருக்கு சிறப்பு சலுகை!
இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு - ரவி சாஸ்திரி உள்ளிட்ட நால்வருக்கு சிறப்பு சலுகை!
இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்த்ரிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!
இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்த்ரிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!
ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் ரோஹித் - ரவி சாஸ்திரி புகழாரம்
ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் ரோஹித் - ரவி சாஸ்திரி புகழாரம்
Advertisement