Highlights: முதலாவது டி20 போட்டி: ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா

Updated: 21 November 2018 17:52 IST

இந்திய அணிக்கு டக்வெர்த் லூயிஸ் முறையில் 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Live Cricket Score, India vs Australia 1st T20I Live Updates: Cautious Start By Australia Openers
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி பிரிஸ்பனில் நடைபெற்று வருகிறது. © Twitter

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று பிரிஸ்பனில் தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலிய அணி வார்னர், ஸ்மித் ஆகியோரது தடை, சமீபத்திய மோசமான ஃபார்ம் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய அணி முன்பு எப்போதும் இருந்ததை விட பலம் பொருந்திய அணியாக உள்ளது. விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற முறை ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகளில் ஆடியபோது 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வொயிட்வாஷ் செய்தது இந்திய அணி. கடந்த வருடம் ஜூலைக்கு பிறகு இந்திய அணி எந்த டி20 போட்டியிலும் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது கோலி மட்டும் 199 ரன்கள் குவித்திருந்தார். அதேசமயம், ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், ஸ்மித், பான்க்ராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை செய்யப்பட்டது, அதற்கு ஓராண்டு தடையை குறைக்க சொல்லி அதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மறுத்தது என போராட்டத்தில் உள்ளது. 

இவர்களின் தடையால் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி இளம் வீரர்களை நம்பியே இந்த முறை களமிறங்குகிறது.  கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் டி20 செயல்பாடும் மிகவும் மோசமாக உள்ளது. ஜூன் மாதம் இங்கிலாந்துடன் நடந்த ஒரே ஒரு டி20 போட்டியில் தோல்வி, பாகிஸ்தான், ஜிம்பாவேயுடன் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் ஃபைனலில் தோல்வி, பாகிஸ்தானுடன் நடந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் தோல்வியுற்றது. 

இந்திய அணியைப் பொறுத்தமட்டில் ராகுலின் ஃபார்ம் மட்டுமே கவலையளிக்கும் விதமாகவுள்ளது. மற்றபடி துவக்க வீரர்கள் கோலி ஆகியோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர்.

மாலை 5:30: 17 ஓவரில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடத்துவங்கிய இந்தியா 17 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து ரன்கள்  169 குவித்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது.  சென்ற வருடம் ஜூலை மாதத்துக்கு பிறகு இந்தியா சந்திக்கும் முதல் டி20 தோல்வி இது.

மாலை 5:26: பாண்ட்யா, கார்த்திக் அடுத்தடுத்த பந்தில் அவுட்... இந்தியா வெற்றிக்கு 2 பந்தில் 11 ரன்கள் தேவை.

மாலை 5:20:  கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 6 பந்தில் 13 ரன்கள் தேவை!

மாலை 5:17 பன்ட் அவுட்... இந்தியா வெற்றி பெற 9 பந்து 18 ரன்கள் தேவை.

மாலை 5:12: 15 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவிப்பு.  இந்தியா வெற்றி பெற இன்னும் 12 பந்துகளில் 24 ரன்கள் தேவை.

மாலை 5:05: 14 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் குவிப்பு.  இந்தியா வெற்றி பெற இன்னும் 18 பந்துகளில் 35 ரன்கள் தேவை.  ஆன்ட்ரூ டையின் இந்த ஓவரில் கார்த்திக் மற்றும் பன்ட் 25 ரன்கள் எடுத்துள்ளனர்.

மாலை 04:56: 13 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் குவிப்பு.  இந்தியா வெற்றி பெற இன்னும் 24 பந்துகளில்  60 ரன்கள் தேவை.

மாலை 4:50: தவான் அவுட்... 11.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் குவிப்பு.  இந்தியா வெற்றி பெற இன்னும் 33 பந்துகளில் 69 ரன்கள் தேவை. தவான் 42 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

மாலை 4:44: கோலி அவுட்... 10.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் குவிப்பு.  இந்தியா வெற்றி பெற இன்னும் 37 பந்துகளில் 80 ரன்கள் தேவை.

மாலை 4:41: இந்தியா 10 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது.  இந்தியா வெற்றி பெற இன்னும் 42 பந்துகளில் 81 ரன்கள் தேவை.

மாலை 16:37: இந்தியா 9  ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 84 ரன்கள் குவித்துள்ளது.  இந்தியா வெற்றி பெற இன்னும் 48 பந்துகளில் 90 ரன்கள் தேவை. ராகுல் விக்கெட்டை தொடர்ந்து விராட் கோலி களமிற‌ங்கியுள்ளார்.

மாலை 16:32: ஆடம் ஸம்பா பந்தில் கே.எல்.ராகுல் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

மாலை 16:29: இந்தியா 8  ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 78 ரன்கள் குவித்துள்ளது.  இந்திய துவக்க வீரர் தவான் 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31 பந்துகளில்59 ரன்கள் குவித்துள்ளார். இந்தியா வெற்றி பெற இன்னும் 54 பந்துகளில்  96 ரன்கள் தேவை.

மாலை 16:17: இந்தியா 5.5 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்களை கடந்தது.

மதியம் 16:13: இந்தியா 5 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு  41 ரன்கள் குவிப்பு. ஷிகர் த்வான் அதிரடியாக ஆடி 6 பவுண்டரிகளுடன் 32 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

மதியம் 16:05: இந்தியா 3 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி  32 ரன்கள் குவிப்பு. ஷிகர் த்வான் அதிரடியாக ஆடி 5 பவுண்டரிகளுடன் 27 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

மதியம் 15:52: இந்தியா அதிரடி துவக்கம் . முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளுடன் 11 ரன்கள் குவிப்பு

மதியம் 15:50 : இந்திய துவக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் 174 ரன்கள் என்ற இலக்குடன் ஆட்டத்தை துவங்கினர்.

மதியம் 15:39: இந்திய அணிக்கு டக்வெர்த் லூயிஸ் முறையில் 17 ஓவர்களில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதியம் 15:39: மழை குறுக்கீட்டால் 17 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா 158 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் 46 ரன்களும்,  லின் 37 ரன்களும், பின்ச் 27 ரன்களும் குவித்தனர். இந்திய தரப்பில் குல்திப் 2 விக்கெட்டுகளையும், கலீல், பும்ராஹ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மதியம் 15:35 மழை முடிந்து துவங்கிய ஆட்டத்தின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் 46 ரன்கள் எடுத்து பும்ராஹ் பந்தில் ஆட்டமிழந்தார். 17 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

மதியம் 14.39:  16.1 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டுள்ளது. மேக்ஸ்வெல் 46 ரன்களுடனும், ஸ்டோனின்ஸ் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மதியம் 14.32:  15.4 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்துள்ளது ஆஸ்திரேலியா.

மதியம் 14.22:  14 ஓவரில் மேக்ஸ்வெல் விஸ்வரூபம், க்ருணால் பாண்ட்யா பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர் உட்பட 23 ரன்கள் குவித்தார்

மதியம் 14.22:  13 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் குவிப்பு. மேக்ஸ்வெல் 10 ரன்களுடனும், ஸ்டோனின்ஸ் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மதியம் 14.07 :  முதலாவது டி20யில் 10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் குவித்துள்ளது. கிறிஸ் லின் 37 ரன்களுடன் களத்தில் உள்ளார். குல்தீப் மற்றும் கலீல் அஹமது தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

மதியம் 13:58 கலீல் அகமதின் ஒரே ஒவ்வரில் 21 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா

மதியம் 14.01 : குல்தீப் பந்துவீச்சில் கலீல் அகமதிடம் கேட்ச் கொடுத்து, 27 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார் பின்ச்

மதியம் 13:55 : 7.3 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. கிறிஸ் லின் 16 ரன்கள், பின்ச் 27 ரன்கள்

மதியம் 13:54 : கலீல் அகமதின் பந்தில் கிறிஸ் லின் தொடரின் முதல் சிக்ஸரை அடித்தார்

மதியம் 13:50 : ஆஸ்திரேலியா பவர் ப்ளேவான முதல் 6 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் குவித்துள்ளது. பின்ச் 25 ரன்களுடனும் , லின் 6  ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மதியம் 13:45 : ஆஸ்திரேலியா 5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் குவித்துள்ளது. பின்ச் 19 ரன்களுடனும் , லின் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மதியம் 13:40 : டோர்ஸி ஷார்ட் கலீல் அகமது பந்துவீச்சில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா!

மதியம் 13:37:  4 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் குவித்துள்ளது. 

மதியம் 13:19 : ஆரோன் பின்ச், ரோர்ஸி ஷார்ட் ஆட்டத்தை துவங்கியுள்ளனர். 

மதியம் 13:10 கடைசியாக இந்த இரு அணிகளும் மோதிய 10 டி20 போட்டிகளில் இந்தியா 8 போட்டிகளை வென்றுள்ளது

மதியம் 12:58: முதலாவது டி20 போட்டி பிரிஸ்பனில் துவங்கியுள்ளது. இதில் டாஸில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. தோனி இல்லாத இந்திய அணியில் ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்பின்னர்களில் குல்தீப்க்கு மட்டுமே வய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிற‌ங்கியுள்ளது. ஆஸ்திரேலியா ஆடம் ஸம்பா, ஆன்ட்ரூ டை, பெஹரன்டாஃப் மற்றும் ஸ்டான்லேக் உள்ள பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது.

அணி விவரம்:

இந்தியா : ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட்(கீப்பர்), தினேஷ் கார்த்திக், க்ருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, பும்ராஹ்

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச்(கேப்டன்), ரோர்ஸி ஷார்ட், கிறிஸ் லின், க்ளேன் மேக்ஸ்வெல், ஸ்டோனின்ஸ், மெக்டோர்மோட், அலெக்ஸ் கார்வி(கீப்பர்), ஆடம் ஸம்பா, ஆன்ட்ரூ டை, பெஹரன்டாஃப் ,ஸ்டான்லேக்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
முதலாவது டி20: இந்தியா தோல்வி - சேவாக்கின் நக்கலான ட்விட்!
முதலாவது டி20: இந்தியா தோல்வி - சேவாக்கின் நக்கலான ட்விட்!
நான்கு ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா!
நான்கு ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா!
Highlights: முதலாவது டி20 போட்டி: ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா
Highlights: முதலாவது டி20 போட்டி: ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா
இந்தியா - ஆஸி., 1வது டி20: எங்கு, எப்படி நேரலையில் பார்ப்பது..?
இந்தியா - ஆஸி., 1வது டி20: எங்கு, எப்படி நேரலையில் பார்ப்பது..?
முதலாவது டி20: பலம் வாய்ந்த இந்தியாவுடன் மோதும் இளம் ஆஸ்திரேலியா!
முதலாவது டி20: பலம் வாய்ந்த இந்தியாவுடன் மோதும் இளம் ஆஸ்திரேலியா!
Advertisement