அடிலெய்டில் வைரலான விராட் கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டம்!

Updated: 07 December 2018 11:43 IST

ஆட்டம் துவங்கிய மூன்றாவது பந்திலேயே ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் பின்ச், ஸ்டெம்புகள் சிதற இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார்

Virat Kohli Sets Adelaide Alight With Fiery Celebration As Ishant Sharma Dismisses Aaron Finch - Watch
விக்கெட்டை இழந்த பின்ச் செய்வதறியாமல் திகைக்க, கோலி துள்ளிக்குதித்து கொண்டாடினார். © Screengrab: cricket.com.au

ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை, விக்கெட்டோடு துவங்கியது. ஆட்டம் துவங்கிய மூன்றாவது பந்திலேயே ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் பின்ச் ஸ்டெம்புகள் சிதற இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். பந்தை தவறாக கணித்த பின்ச் இன் சைடு எட்ஜ் ஆகி போல்டானார். பின்ச் செய்வதறியாமல் திகைக்க கோலி துள்ளிக்குதித்து கொண்டாடினார். ஆஸ்திரேலியாவில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் விக்கெட்டுக்கு கோலியின் ரியாக்ஷன் வைரலாகி வருகிறது. 

முன்னதாக முதல் டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தை 250/9 என்ற கணக்குடன் துவங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் புஜாரா 123 ரன்களையுன், ரோஹித் ஷர்மா 37 ரன்களையும், பன்ட்,அஷ்வின் தலா 25 ரன்களையும் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், லயன், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா முதல் ஓவரின் 3 வது பந்திலேயே ரன் கணக்கை துவங்காமல், இஷாந்த் ஷர்மா பந்தில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார் ஃபின்ச்.  இந்திய பந்துவீச்சை சமாளிப்பது ஆஸி வீரர்களுக்கு சிரமமான விஷயமாக இருந்தது. இஷாந்த் மற்றும் ஷமி இன்று வீசிய 10 ஓவர்களில் 6 மெய்டன் மற்றும் 10 ரன்களே எடுக்கப்பட்டன.

தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹெண்ட்ஸ்கோம்ப் 33 ரன்களுடனும், ட்ராவிஸ் ஹெட்  17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு யுவராஜின் கிண்டலான பதில்!
விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு யுவராஜின் கிண்டலான பதில்!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
புது விளம்பரத்தில் ராப் பாடிய கோலி மற்றும் பன்ட்... கலாய்த்த நெட்டிசன்கள்!
புது விளம்பரத்தில் ராப் பாடிய கோலி மற்றும் பன்ட்... கலாய்த்த நெட்டிசன்கள்!
மற்ற அணிகளுக்கு இந்திய பந்துவீச்சு சவாலாக அமையும் - புவனேஷ்வர் குமார்
மற்ற அணிகளுக்கு இந்திய பந்துவீச்சு சவாலாக அமையும் - புவனேஷ்வர் குமார்
"ரிஷப் பன்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்" - காரணம் சொல்லும் கோலி
"ரிஷப் பன்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்" - காரணம் சொல்லும் கோலி
Advertisement