ஆஸி.,க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: 25-வது சதத்தை பதிவு செய்து அசத்தினார் விராட் கோலி!

Updated: 16 December 2018 10:46 IST

கோலி 128-வது இன்னிங்கஸில் தனது 25-சதத்தை எட்டியுள்ளார்

Virat Kohli Hits 25th Test Century, Fifth Of The Year, Sixth In Australia
விராட் கோலி தனது 214ஆவது பந்தில் 25ஆவது சதத்தை எட்டினார். © AFP

பெர்த்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டியில் மிக வேகமாக சதம் அடித்த டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தை விராட் கோலி பெற்றுள்ளார்.

விராட் கோலி - ரகானா ஜோடியின் நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களில் இருந்தது.

விராட் கோலி 82 ரன்களுடனும் (181 பந்து, 9 பவுண்டரி), களத்தில் இருந்தார். இன்னும் 18 ரன்கள் அடித்தால் டெஸ்ட் போட்டிகளில் கோலி தனது 25-ஆம் சதத்தை பதிவு செய்வார் என்ற நிலையில் இன்றைய ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இன்றைய 3ஆம் நாள் ஆட்டத்தில், ஸ்டார்க் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டி விராட் கோலி தனது 25-வது சதத்தை பதிவு செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்து கோலி அசத்தியுள்ளார்.

வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் விரைவாக சதம் அடிக்கும் கோலி, இந்த போட்டியில் சதம் அடிக்க 214 பந்துகளை எதிர்கொண்டார்.

இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கர் 130 இன்னிங்ஸில் தனது 25-வது சதத்தை எட்டி இருந்தார். இதனை முறியடித்த கோலி 128-வது இன்னிங்கஸில் தனது 25-சதத்தை எட்டியுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
லண்டனிலிருந்து நாடு திரும்பிய கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா!
லண்டனிலிருந்து நாடு திரும்பிய கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா!
கோலி அவுட், தோனி டவுட் - மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெறுவர்?
கோலி அவுட், தோனி டவுட் - மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெறுவர்?
ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை ஆடும் XI அணி... வாய்ப்பை தவறவிட்ட விராட் கோலி!
ஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை ஆடும் XI அணி... வாய்ப்பை தவறவிட்ட விராட் கோலி!
வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?
வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரின் இந்தியா அணியில் தோனிக்கு இடமுண்டா?
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
ரோஹித் - கோலி மோதல் : இரட்டை தலைமைக்கான வாய்ப்பை யோசிக்கும் பிசிசிஐ
Advertisement