முதல் ஒருநாள் போட்டி: ரோஹித் சதம் வீண், இந்தியா தோல்வி! #Highlights

Updated: 12 January 2019 15:59 IST

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் துவங்கியது

Cricket Scoreboard, India vs Australia 1st ODI Highlights: Usman Khawaja, Shaun Marsh Steady Australia After Openers Depart
© AFP

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் துவங்கியது. டாஸில் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்தியா 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர் என்ற உத்தியுடன் களமிறங்கியது. பீட்டர் சிடில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.

டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்தது, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்தத் தொடரையும் வென்றால் ஆஸ்திரேலிய பயணத்தில் ஒருதொடரையும் இழக்காமல் நாடு திரும்பிய அணி என்ற பெருமையை பெரும்.

பெண்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததால் ஹர்திக் மற்றும் ராகுல் இன்றைய போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கை துவங்கிய 3 வது ஓவரிலேயே பின்ச், புவனேஷ்வர் குமார் பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்த துவக்க வீரரான கேரி, குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் எடுத்துள்ளது.
 

 

 

 

 

 

ஓவர் 17 : 

ட்ரிங்ஸ் ப்ரேக்கின் போது ஆஸ்திரேலியா 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 26 ரன்களுடனும்,  ஷான் மார்ஷ் 13 ரன்களுடனும் நிதானமாக ஆடி வருகின்றனர். இந்திய தரப்பில் குல்தீப், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
 

ஓவர் 20 : 

இரண்டாவது பவர் ப்ளேயின் முடிவில்  ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 31 ரன்களுடனும்,  ஷான் மார்ஷ் 24 ரன்களுடனும் நிதானமாக ஆடி வருகின்றனர். இருவரும் இணைந்து 50 ரன்கள் சேர்த்து ஆரம்ப சரிவிலிருந்து அணியை மீட்டு வருகின்றனர்.

ஓவர் 25: 

ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் பாதி ஆட்டத்தில்  ஆஸ்திரேலியா 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 50 ரன்களுடனும்,  ஷான் மார்ஷ் 31 ரன்களுடனும் நிதானமாக ஆடி வருகின்றனர். இந்நிலையில், கவாஜா அரைசதமடித்தார்.2016 க்கு பிறகு அவர் அடிக்கும் முதல் அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவர் 28.3 : கவாஜா அவுட் 

அரைசதமடித்து சிறப்பாக ஆடி வந்த கவாஜா ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதனை ரிவியூ செய்தார் கவாஜா. அதிலும் அவுட் என தெரிய வர ஒரு ரிவியூவை இழந்தது ஆஸ்திரேலியா. 29 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா.

ஓவர் 35:

அபாரமாக ஆடி வந்த ஷான் மார்ஷ், தனது அரைசதத்தை நிறைவு செய்தார். 66 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரைசதமடித்தார் மார்ஷ். ஹேண்ட்ஸ்கோம்பும் 26 பந்தில் 26 ரன் எடுத்து ஆடி வருகிறார். ஆஸ்திரேலியா 35 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்துள்ளது.

ஓவர் 38 : ஷான் மார்ஷ் அவுட் 

ஷான் மார்ஷ் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் பந்தில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 36 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா. இறுதி கட்ட ஓவர்களில் அதிரடி காட்ட விடாமல் இந்தியா சிறப்பாக பந்துவீசி வருகிறது.

ஓவர் 45:

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி வந்த ஹேண்ட்ஸ்கோம்ப், குல்தீப் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி அரைசதமடித்தார். குல்தீப் 10 ஓவர்கள் வீசி 54 ரன்களை கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 48 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

45 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா.

50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்துள்ளது. ஆரம்பம் முதலே மெதுவாக ரன் குவித்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள், சரியான நேரத்தில் வேகமெடுக்காததால் ஆஸ்திரேலியா இந்த ஸ்கோரை எட்டியுள்ளது. ஒரு கட்டத்தில் 300 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெதுவான ரன்குவிப்பால் 288 ரன்களை எடுத்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் 3 வீரர்கள் அரைசதமடித்தனர், ஹேண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களும், ஷேன் மார்ஷ் 53 ரன்களும், கவாஜா 59 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். ஸ்டோனின்ஸ் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் குவித்திருந்தார். மேக்ஸ்வெல் தாமதமாக இறங்கியதும் ஸ்கோர் அதிகரிக்காமல் போக காரணமகியது. கடைசியில் மேக்ஸ்வெல் 5 பந்தில் 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்திய அணிக்கு 289 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

289 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா, முதல் ஓவரின் கடைசி பந்தில் தவான் விக்கெட்டை இழந்தது. பெகன்ட்ராஃப் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். ஒரு ஓவர் முடிவில் ஒரு ரன் ஒரு விக்கெட்!

ஓவர் 4: கோலி, ராயுடு அவுட்!

நான்காவது ஓவரை ரிச்சர்ட்ஸன் வீசினார். இதில் மூன்றாவது பந்தில் கோலி ஸ்டோனின்ஸிடம் கேட்ச் கொடுத்து 3 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார்.  ஐந்தாவது பந்தில் ராயுடு டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி 4 ஓவரில் நான்கு ரன் குவித்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிற‌து. தோனி களமிறங்கியுள்ளார். ரிச்சர்ட்ஸன் 2 ஓவர் வீசி ரன் ஏதும் கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஓவர் 10: இந்தியா நிதான ஆட்டம்!

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்ததால், இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவும், தோனியும் பொறுப்பை உணர்ந்து ஆடி வருகின்றனர். இந்திய அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 3 ரன்களுடனும், ரோஹித் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தோனி 1 ரன் எடுத்திருந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக மட்டும் 10 ஆயிரம் ரன்களை கடந்தார் என்ற பெருமையை பெற்றார். இந்த பெருமையை பெரும் 5வது இந்தியர் தோனி.

9 வருடங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பீட்டர் சிடில் போட்டியின் பத்தாவது ஓவரை வீசினார். அதில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

ஓவர் 16: 

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்ததால் இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவும், தோனியும் பொறுப்பை உணர்ந்து ஆடி வருகின்றனர். இந்திய அணி 16 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 13 ரன்களுடனும், ரோஹித் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தோனி, லயன் பந்தில் அடித்த சிக்ஸர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

ஓவர் 25: 

ஆரம்பத்தில் அணியின் விக்கெட்டுகள் இழந்ததால் அமைதியாக ஆடிய ரோஹித் ஷர்மா, பின் அதிரடியில் இறங்கினார்.  முதல் 18 பந்துகளில் ரன் எடுக்காத ரோஹித் ஷர்மா 62 பந்துகளில் அரைசதமடித்தார். தோனியும் பொறுப்பாக ஆடி 37 ரன் குவித்துள்ளார். இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் குவித்துள்ளது. இன்னும் 25 ஓவர்களில் 189 ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

ஓவர் 30:

4 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையிலிருந்து ரோஹித் - தோனி இணை 133 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலைக்கு ஆட்டத்தை கொண்டு வந்துள்ளது. 30 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் அபாரமாக ஆடி ரன்குவித்து வருகிறார். ரோஹித் ஷர்மா 84 பந்தில் 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் குவித்துள்ளார். தோனி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடி வருகிறார்.

ஓவர் 32: தோனி அவுட்

4 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையிலிருந்து ரோஹித் - தோனி இணை 4வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ரோஹித் அபாரமாக ஆடி ரன்குவித்து வருகிறார். ரோஹித் ஷர்மா 84 பந்தில் 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் குவித்துள்ளார். தோனி பொறுமையாக ஆடி 92 பந்துகளில் ஒரு சிக்ஸர் மூன்று பவுண்டரிகளுடன் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். 32.2 ஓவரில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்துள்ளது. இந்திய வெற்றிக்கு இன்னும் 106 பந்தில் 148 ரன்கள் தேவை.

ஓவர் 40: ரோஹித் சதம்!

அபாரமாக ஆடிய  ரோஹித் ஷர்மா 110 பந்தில் 4 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் சதமடித்தார். 40 ஓவரில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்துள்ளது. தினேஷ் கார்த்திக் 21 பந்தில் 12 ரன் எடுத்து ரிச்சர்ட்ஸன் பந்தில் போல்டானார். இந்திய வெற்றிக்கு இன்னும் 60 பந்தில் 109 ரன்கள் தேவை. 

ஓவர் 45: ரோஹித் அதிரடி

45 ஓவரில் இந்தியா 6  விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 8 ரன்கள் குவித்து ரிச்சர்ட்ஸன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய வெற்றிக்கு இன்னும் 30 பந்தில் 75 ரன்கள் தேவை.  ரோஹித் ஷர்மா  126 பந்தில் 6 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 128 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ஓவர் 46: ரோஹித் அவுட்

46 ஓவரில் இந்தியா 7  விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித் ஷர்மா 129 பந்தில் 133 ரன்கள் குவித்து ஸ்டோனின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய வெற்றிக்கு இன்னும்  24 பந்தில் 66 ரன்கள் தேவை.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்குவிக்காமல் ஆட்டமிழந்து, 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து ரோஹித் மற்றும் தோனியின் பொறுப்பான் ஆட்டத்தால் மீண்டு வந்தது. பின் தோனி ரோஹித் அவுட் ஆக பின் வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியா முதலாவது ஒருநாள் போட்டியை 34 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது. இந்திய தரப்பில் ரோஹித் 133 ரன்களும், தோனி 51 ரன்களும் குவித்தனர். புவனேஷ்வர் குமார் 29 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் ரிச்சர்ட்ஸன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டோனின்ஸ், பெகன்ட்ராஃப் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பீட்டர் சிடில் 9 வருடங்களுக்கு பிறகு ஆடிய போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி ஜனவரி 15ம் தேதி அடிலெய்டில் நடக்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
10,000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்தியர் தோனி!
10,000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்தியர் தோனி!
முதல் ஒருநாள் போட்டி: ரோஹித் சதம் வீண், இந்தியா தோல்வி! #Highlights
முதல் ஒருநாள் போட்டி: ரோஹித் சதம் வீண், இந்தியா தோல்வி! #Highlights
சர்ச்சை எதிரொலி: பாண்ட்யா மற்றும் ராகுல் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கம்!
சர்ச்சை எதிரொலி: பாண்ட்யா மற்றும் ராகுல் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கம்!
நாளை நடக்கும் ஒரு நாள் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது
நாளை நடக்கும் ஒரு நாள் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மிட்செல் மார்ஷ் இடம்பெறவில்லை!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மிட்செல் மார்ஷ் இடம்பெறவில்லை!
Advertisement