நாதன் லயனை சமாளிக்க கோலிக்கு கங்குலி சொல்லும் அட்வைஸ்!

Updated: 21 December 2018 09:35 IST

இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்

India vs Australia: Sourav Ganguly Reveals Plan To Tackle Nathan Lyon
© AFP

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இவரை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில் ''இந்திய வீரர்கள் லயன் ஆஃப் சைடுக்கு வெளியே வீசும் பந்துகளை தடுத்து ஆடுகிறார்கள். அது தான் லயன் விக்கெட்டுகளை கைப்பற்ற காரணமாகிறது'' என்றார்.

மேலும் '' இது குறித்து கோலிக்கு செய்தி அனுப்பவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இன்னும் அனுப்பவில்லை. அவருக்கு நான் சொல்ல நினைப்பது ஒன்றே ஒன்றுதான். லயனை தடுத்து ஆடுவதற்கு பதில் ஆக்ரோஷமான அடித்து ஆடினால் எளிதாக 300-350 ரன்களை கடக்க முடியும்'' என்றார்.

லயன் நல்ல சுழற்பந்துவீச்சாளர் தான். ஆனாலும் வார்னே, முரளிதரன் போன்றவர்கள் அல்ல. இவரிடம் இந்தியர்கள் துணைக்கண்டத்துக்கு வெளியே விக்கெட்டுகளை இழப்பது வருத்தமாக உள்ளது'' என்றும் கூறியுள்ளார்.

லயன் இரண்டாவது டெஸ்ட்டில் மட்டும் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 82 டெஸ்ட்களில் அடியுள்ள லயன் 334 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் வரும் டிசம்பர் 26ம் தேதி மெல்பெர்னில் துவங்குகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் தோனிக்கு இல்லை" - நண்பர் அருண் பாண்டே
"உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் தோனிக்கு இல்லை" - நண்பர் அருண் பாண்டே
'ஹால் ஆஃப் ஃபேம்' விருது - குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சச்சின்!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்... இந்திய அணி ஜூலை 21ம் தேதி தேர்வு!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்... இந்திய அணி ஜூலை 21ம் தேதி தேர்வு!
சச்சின் மற்றும் டொனால்டுக்கு
சச்சின் மற்றும் டொனால்டுக்கு 'ஹால் ஆஃப் ஃபேம்' பெருமை!
"தோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ அவரிடம் தெரிவிக்க வேண்டும்" - வீரேந்தர் சேவாக்
"தோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ அவரிடம் தெரிவிக்க வேண்டும்" - வீரேந்தர் சேவாக்
Advertisement