சிட்னி டெஸ்ட்: மழையால் ரத்து... தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை!

Updated: 07 January 2019 12:19 IST

Live Cricket Score India vs Australia: இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது

Live Cricket Score, India vs Australia 4th Test Day 5: Rain Washes Out First Session In Sydney
India vs Australia Live Score: கடைசி நாள் ஆட்டத்தின் மழைகாரணமாக முதல் பகுதி ரத்தானது © Twitter

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. கடைசி நாள் ஆட்டத்தின் மழைகாரணமாக முதல் பகுதி ரத்தானது. நடுவர்கள் களத்தை ஆய்வு செய்த பின்னர் உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக டாஸில் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இந்தியா புஜாரா மற்றும் பன்ட் ஆகியோரின் சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளெர் செய்தது.

பின்னர் குல்தீப் யாதவின் சுழலில் ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஃபாலோ ஆன் பெற்றது. 31 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் ஃபாலோ ஆன் பெற்றது. 322 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமானது. மழை தொடர்ந்து பெய்ததால் முதல் பாதி ஆட்டம் ரத்தாகியுள்ளது. இன்னும் 60 ஓவர்களே உள்ள நிலையில் ஆட்டம் ட்ராவை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

மழை தொடர்ந்ததால் சிட்னி டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்தியா இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வெல்வது இதுவே முதல்முறை. 72 வருட டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவில் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இதற்கு முன் கங்குலி தலைமையில் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ததே சிறப்பான தொடராக இருந்தது. ஆட்டநாயகனாகவும், ஆட்ட தொடர் நாயகனாவும் புஜாரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
''இது வெறும் அணி அல்ல குடும்பம்''- வெற்றிக்குப்பின் கோலியின் நெகிழ்ச்சியான ட்விட்!
சிட்னி டெஸ்ட்: மழையால் ரத்து... தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை!
சிட்னி டெஸ்ட்: மழையால் ரத்து... தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை!
சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன்.. வெற்றி பெறுமா இந்தியா?
சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன்.. வெற்றி பெறுமா இந்தியா?
சிட்னி டெஸ்ட்: ஃபாலோ-ஆனை நோக்கி ஆஸி, வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைபட்டது!
சிட்னி டெஸ்ட்: ஃபாலோ-ஆனை நோக்கி ஆஸி, வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைபட்டது!
WWE வீரர் ஷான் மைக்கேலை இமிடேட் செய்த ரிஷப் பன்ட்!
WWE வீரர் ஷான் மைக்கேலை இமிடேட் செய்த ரிஷப் பன்ட்!
Advertisement