மேக்ஸ்வெல்லை விரட்டிய புவனேஷ்வர் குமாரின் 'வாவ்' பீல்டிங்

Updated: 19 January 2019 13:18 IST

ஆட்டத்தின் 35 – வது ஓவரில் முகமது சமியின் பந்தை தூக்கி அடிக்க நினைத்தார். ஆனால் பந்து பேட்டின் விளிம்பில் பட்டது. புவனேஸ்வர் குமார் பவுண்டரி அருகில் இருந்து ஓடி வந்து டைவ் அடித்து அந்த பந்தை பிடித்தார்

India vs Australia: Bhuvneshwar Kumar Takes Brilliant Diving Catch To Dismiss Glenn Maxwell
தன் அற்புதமான பீல்டிங்கால் மேக்ஸ்வெல்லை அவுட் ஆக்கினார் புவனேஸ்வர் குமார் © Twitter

நேற்று நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒரு நாள் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த தொடரின் வெற்றிக்கு இந்தியாவின் பீல்டிங்கும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஜடேஜாவின் மின்னல் வேக ரன் அவுட்டை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. நேற்றை போட்டியிலும் புவனேஷ்வர் குமார் தன் அற்புதமான பீல்டிங்கால் மாக்ஸ்வெல்லை அவுட் ஆக்கினார்.

ஆட்டத்தின் 35 – வது ஓவரில் முகமது சமியின் பந்தை தூக்கி அடிக்க நினைத்தார் மேக்ஸ்வெல். ஆனால் பந்து பேட்டின் விளிம்பில் பட்டுச் சென்றது. அதனை புவனேஸ்வர் குமார் பவுண்டரி அருகில் இருந்து ஓடி வந்து டைவ் அடித்து பிடித்தார்.

அதனை பாருங்கள் :

 

அவரின் இந்த அற்புதமான பீல்டிங்கால் மேக்ஸ்வெல் 26 ரன்களுக்கு ஆவுட் ஆனார்.

230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. தோனியின் நிதான ஆட்டத்தாலும் ஜாதவின் அதிரடியாலும் இந்த இலக்கை இந்தியா சேஸ் செய்து வென்றது. தொடர் நாயகன் விருதை தோனி வென்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தினார் புவனேஸ்வர் குமார்
  • ஆஸ்திரேலியா அணி துவக்க வீரர்களை அவுட் ஆக்கினார் புவனேஸ்வர் குமார்
  • தொடர் நாயகன் விருதினை தோனி வென்றார்
தொடர்புடைய கட்டுரைகள்
தோனி எப்போது ஓய்வு - வார்னே சொன்ன பதில்!
தோனி எப்போது ஓய்வு - வார்னே சொன்ன பதில்!
''படித்த யாராவது இப்படி பேசுவார்களா'' கம்பீரை சாடும் அப்ரிதி!
"பயிற்சி ஆட்ட தோல்வி குறித்து கவலை வேண்டாம்" - சச்சின் டெண்டுல்கர்
"பயிற்சி ஆட்ட தோல்வி குறித்து கவலை வேண்டாம்" - சச்சின் டெண்டுல்கர்
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து மோதல்! #LiveUpdates
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து மோதல்! #LiveUpdates
இங்கிலாந்து கால்பந்து கேப்டனுடன் செல்ஃபி... கோலியை கலாய்த்த அபிஷேக் பச்சன்
இங்கிலாந்து கால்பந்து கேப்டனுடன் செல்ஃபி... கோலியை கலாய்த்த அபிஷேக் பச்சன்
Advertisement
ss