ஹர்திக், அகர்வால் இன்.. ப்ரித்வி அவுட் - கடைசி இரண்டு டெஸ்ட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு!

Updated: 18 December 2018 10:53 IST

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை அறிவித்துள்ளது

India vs Australia: BCCI Announces Squad For Remaining Two Tests, Hardik Pandya Called Up, Mayank Agarwal Replaces Prithvi Shaw
© ICC/Twitter

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை அறிவித்துள்ளது. இந்த அணியில் புதிதாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் துவக்க வீரர் மயன்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளனர். பண்ட்யா காயத்திலிருந்து மீண்டுள்ளதாலும், ப்ரித் வி ஷாவின் காயம் குணமடையாததால் அவருக்கு பதில் மயன்க் அகர்வாலும் அணியில் இணைந்துள்ளனர்.

மெல்பெர்ன் மற்றும் சிட்னியில் நடக்கும் போட்டிகளில் காயத்திலிருந்து இன்னும் பிரித்வி ஷா குணமடையாததால் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த ப்யிற்சி போட்டியில் பிரித்வி ஷா காயமடைந்தார்.

3வது மற்றும் 4வது டெஸ்ட்டுக்கான அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, ராஹானே, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பன்ட், பார்த்திவ் பட்டேல், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், பும்ராஹ், புவனேஷ் குமார், ஹர்திக் பாண்ட்யா, மயன்க் அகர்வால்.

இந்திய பயிற்சியாளர் இரண்டாவது டெஸ்ட்டுக்கு முன்பாக 3வது டெஸ்ட்டுக்கு பிரித்வி திரும்புவார் என்று கூறியிருந்தார். ஆனால் காயம் இன்னும் குணமடையாததால் அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இப்போது 1-1 என்ற சமநிலையை எட்டியுள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பும் நிலையில் அடுத்த டெஸ்ட்டுக்கான அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
எலிமினேட்டர் சுற்றில் வெற்றி: "எல்லார் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்கிறேன்" - ஷ்ரேயாஸ்
எலிமினேட்டர் சுற்றில் வெற்றி: "எல்லார் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்கிறேன்" - ஷ்ரேயாஸ்
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 11 வீரர்களை தக்கவைத்த மும்பை டி20 லீக்
ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட 11 வீரர்களை தக்கவைத்த மும்பை டி20 லீக்
சச்சின் பிறந்த நாளுக்கு ஐசிசியின் ஆச்சர்யமூட்டும் ட்விட்!
சச்சின் பிறந்த நாளுக்கு ஐசிசியின் ஆச்சர்யமூட்டும் ட்விட்!
காயத்திற்கு பிறகு ஐபிஎல்லுக்கு திரும்பும் ப்ரித்வி ஷா!
காயத்திற்கு பிறகு ஐபிஎல்லுக்கு திரும்பும் ப்ரித்வி ஷா!
Advertisement